உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இயந்திர கோளாறால் மும்பையில் இண்டிகோ விமானம் தரையிறக்கம்; பயணிகள் அவதி!

இயந்திர கோளாறால் மும்பையில் இண்டிகோ விமானம் தரையிறக்கம்; பயணிகள் அவதி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: நடுவானில் பறந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இண்டிகோ விமானம் மும்பையில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. இதனால் பயணிகள் அனைவரும் அவதி அடைந்தனர்.டில்லியில் இருந்து கோவாவுக்கு நேற்று (ஜூலை 16) இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானத்தில் 191 பேர் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து, அவர் விமானத்தை அவசரமாக தரையிறக்க முடிவு செய்தார். பின்னர் விமானம் கோவா விமான நிலையத்தில் பத்திரமாக நேற்றிரவு 9.53 மணிக்கு தரையிறக்கப்பட்டது.விமானத்தில் இருந்த பணிகள் 191 பேரும் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை விமான நிறுவனம் செய்து கொடுத்தது. இது குறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டில்லி விமான நிலையத்தில் இருந்து கோவா நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. வேறு வழி இல்லாத நிலையில் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.விமானம் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு முன்பு தேவையான சோதனைகள் மேற்கொள்ளப்படும். பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இண்டிகோ விமானம் புவனேஸ்வரிலிருந்து வடக்கே 100 கடல் மைல் தொலைவில் பறந்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக மும்பை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்பதை அவர்கள் உறுதிப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
ஜூலை 17, 2025 16:04

டில்லிலேருந்து மும்பை போகணும்னா இண்டிகோவில்.கல்கத்தாவுக்கு டிக்கெட் எடுக்கணும். விமானத்தில் ஏறி கண்ணை மூடிக்கணும்.


R S BALA
ஜூலை 17, 2025 13:26

எப்ப பாரு இதே வேலையா போச்சு..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை