உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எரிபொருள் கசிவு: இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்

எரிபொருள் கசிவு: இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்

வாரணாசி: கோல்கட்டாவில் இருந்து ஸ்ரீநகர் சென்ற இண்டிகோ விமானத்தில் எரிபொருள் கசிவு கண்டறியப்பட்டதால் வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் இருந்து காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு 166 பேருடன் இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சென்றது. நடுவானில் விமானம் பறந்து கொண்டு இருந்த போது, எரிபொருள் கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து விமானம் அவசரமாக வாரணாசியின் லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0951w29x&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உடனடியாக பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, விமான நிலையத்தில் வழக்கமான பணிகள் நடந்தன. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mani . V
அக் 23, 2025 05:34

எனக்கென்னமோ விமான நிலையத்தை பராமரிக்கும் அதா....., அம்........ குழுமத்தின் மீதுதான் சந்தேகம் வருகிறது. அவர்கள் திட்டமிட்டே விமானங்களை சரியாக சோதிப்பது இல்லை என்று தான் தோன்றுகிறது. அப்பொழுதுதானே அந்த விமான நிறுவனங்கள் நொடித்துப் போகும். ஜீ உதவியுடன் இவர்கள் விமானங்களை இயக்கலாம்.


ஜெகதீசன்
அக் 22, 2025 21:12

சமீப காலங்களாக தினமும் ஓரிரு விமான கோளாறு செய்திகள் வந்த வண்ணமாக இருக்கு. விமான பராமரிப்பிற்கு உரிய பிரத்தியேக வழிகாட்டுதல்களை விமான நிறுவனங்கள் சரிவர கடைபிடிக்க வலியுறுத்தி விமான துறை கண்காணிக்க வேண்டும்.