உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா? வெளியான தகவல்

குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா? வெளியான தகவல்

புதுடில்லி: இந்தாண்டு குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக இந்தோனேஷியா அதிபர் பிரபோவா சுபியாண்டோ பங்கேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது.ஆண்டுதோறும் நடக்கும் குடியரசு தின விழாவின் போது உலக நாடுகளை சேர்ந்த தலைவர்களை இந்தியா அழைப்பது வழக்கம். கடந்த 2024ம் ஆண்டு, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பங்கேற்றார்.இந்நிலையில், இந்தாண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தோனேஷியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோ பங்கேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான முறைப்படியான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா வரும் பிரபோவோ சுபியாண்டோவுடன் பிரதமர் மோடி இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.முன்னதாக, இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு பாகிஸ்தானுக்கு செல்லும் வகையில் பிரபோவோ சுபியாண்டோ பயணம் திட்டமிடப்பட்டு இருந்தது. இதனை பாக்., ஊடகங்கள் வெளியிட்டு இருந்தன. ஆனால், தற்போது இந்த பயணத்தை அவர் ரத்து செய்துள்ளதாக தெரிகிறது.இதற்கு முன் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள்2024- பிரான்ஸ் அதிபர் மேக்ரான்2023- எகிப்து அதிபர் அப்தெல் பதா எல் சிசி2021-2022ம் ஆண்டுகளில் கோவிட் பரவல் காரணமாக யாரும் பங்கேற்கவில்லை2020- பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சோனரோ2019- தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ரமாபோசா2018- ஆசியான் அமைப்பின் 10 நாட்டு தலைவர்கள்2017- அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது ஜயித் அல் நஹ்யான்2016- பிரான்ஸ் அதிபர் பிரான்கோயில் ஹோலாண்டே2015- அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா2014- ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே2013 - பூடான் அரசர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சக் ஆகியோர் பங்கேற்று இருந்தனர். மேலும் பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி(2008), ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின், தென் ஆப்ரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா(1995), பிரிட்டன் முன்னாள் பிரதமர் ஜான் மேஜர்(1993), ஈரான் முன்னாள் அதிபர் முகமது கடாமி(2003),பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஜாக்ஸ் சிராக்(1998),நேபாள மன்னர் பிரேந்தர் பிர் பிக்ரம் ஷா தேவ்(1999),இந்தோனேஷியா முன்னாள் அதிபர் சுசிலோ பம்பாங் யுத்யோனா(2011),மாலத்தீவு முன்னாள் அதிபர் மமுன் அதுல் கயூம்(1991) ஆகியோரும் குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றவர்களில் முக்கியமானவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Karthik
ஜன 12, 2025 16:10

காரணம்.. மற்றவரையும் மதிக்கும் மாண்பு மோடிக்கு உள்ளது. அதே..


V வைகுண்டேஸ்வரன்
ஜன 12, 2025 15:14

இந்திய இஸ்லாமியாரை மூர்க்ஸ் என்று அநாகரிகமாகப் பேசும் பாஜக அயல் நாட்டு இஸ்லாமியாருக்கு கும்பிடு போடுவது தனி ஸ்டைல்.


நிக்கோல்தாம்சன்
ஜன 27, 2025 07:04

மூர்கத்தனத்தை ஆதரிக்கும் மக்களை மூர்கற்கைகள் என்று அழைக்காமல் எப்படி சொல்லவேண்டும்


V வைகுண்டேஸ்வரன்
ஜன 12, 2025 14:20

பாஜக கொத்தடிமைகளின் டிசைனே வேற மாதிரி.


karupanasamy
ஜன 12, 2025 16:28

நீ எரநூறுக்கு மாரடிக்குற ஒரு குடும்பத்து கொத்தடிமை.


N Sasikumar Yadhav
ஜன 12, 2025 21:27

பாரதநாட்டிற்கு வருவது ஒரிஜினல் முஸ்லீம் . உங்கள மாதிரி வாளுக்கு மதமாறி விட்டு இங்கு போலியான பெயரில் போடும் ஆளில்லை . வருவது ஒரிஜினல்


Thiru, Coimbatore
ஜன 12, 2025 11:43

பாகிஸ்தான் பயணம் ரத்து...ஆள்பவன் வலிமையாக இருந்தால்... தீவிரவாத்தை உற்பத்தி செய்யும் நாட்டை புறக்கணித்து உலகின் அதிகம் முஸ்லீம்கள் வாழும் முதலிரண்டு நாடுகளும் இணைந்து செயல்பட்டால் உலகிற்கு நல்லதே... வரவேற்போம் இந்தோனேஷிய அதிபரை..


Venkatesan Ramasamay
ஜன 12, 2025 11:42

ஆயிரம் உண்டுங்கில் ஊழல் எனில் இங்கு அந்நியர் வந்து புகழ் என்ன நீதி ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை