உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தூர்- ராய்ப்பூர் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; அவசர தரையிறக்கம்!

இந்தூர்- ராய்ப்பூர் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; அவசர தரையிறக்கம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: மத்திய பிரதேசம் இந்தூரில் இருந்து ராய்ப்பூருக்கு சென்ற இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம், புறப்பட்ட 30 நிமிடங்களில் இந்தூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.மத்திய பிரதேசம் இந்தூரில் இருந்து ராய்ப்பூருக்கு இன்று (ஜூலை 08) காலை 6.30 மணிக்கு இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான 6E-7295 விமானம் 51 பயணிகளுடன் புறப்பட்டது. ஆனால் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, புறப்பட்ட 30 நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.இதையடுத்து, விமானி இந்தூர் விமான நிலையத்தில் அவசரமாக விமானத்தை தரையிறக்க முடிவு செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு, விமானம் மீண்டும் இந்தூர் விமான நிலையத்தில் பத்திரமாக காலை 7:15 மணிக்கு விமானம் இந்தூரில் தரையிறங்கியது. விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட உடன் பயணிகள் பீதி அடைந்தனர்.விமானத்தில் தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி தோல்வியில் முடிந்தது. இறுதியாக, விமான நிறுவனம் விமானத்தை ரத்து செய்தது. பயணிகளின் டிக்கெட்டுகளுக்கான பணமும் திருப்பித் தரப்பட்டது. இதன் பின்னர், பொறியாளர்கள் விமானத்தின் தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
ஜூலை 09, 2025 05:56

வெளிநாடில்.ஒருத்தர் கிலோ கணக்கில் விருது வாங்கிட்டிருக்காரு.


அப்பாவி
ஜூலை 08, 2025 16:37

விமானம் வாங்குனதிலிருந்து ஒரு தடவையாவது துடைச்சிருப்பாங்களா? நம்ம ஊர் ஹவுசிங் போர்ட் குடியிருப்புகள் மாதிரி கட்டுனதிலிருந்து ஒரு ரிப்பேர் கூட செய்ய மாட்டாங்க.


Nada Rajan
ஜூலை 08, 2025 16:10

எல்லா விமான நிறுவனத்தையும் இழுத்து பூட்ட வேண்டியது தான் என்ன ஒரே தொழில்நுட்ப கோளாறு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை