உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊடுருவல்காரர்கள்தான் அவர்களின் ஓட்டு வங்கி; காங்கிரஸ் மீது அமித்ஷா பாய்ச்சல்

ஊடுருவல்காரர்கள்தான் அவர்களின் ஓட்டு வங்கி; காங்கிரஸ் மீது அமித்ஷா பாய்ச்சல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: ராகுல் மற்றும் அவரது கட்சியின் முக்கிய ஓட்டு வங்கியாக ஊடுருவல்காரர்கள் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டி உள்ளார்.பீஹாரின் சீதாமர்ஹியில், நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: தேஜஸ்வி யாதவின் தந்தையும் தாயும் நீண்ட காலமாக ஆட்சியில் இருந்தனர். அவர்கள் மாநில வளர்ச்சிக்கு என்ன செய்தார்கள்? மத்திய அமைச்சராக இருந்த போது லாலு, பீஹாரில் ரயில்வே உள்கட்டமைப்பிற்காக ரூ.1,132 கோடியை வழங்கினார். அதே நேரத்தில் எங்கள் அரசு ரூ.10,066 கோடியை வழங்கியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=00qdg8y3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

தேசிய பாதுகாப்பு

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் அடிக்கடி நடந்தது. அவர்களைக் கேள்வி கேட்கக்கூட யாரும் இல்லை.ஓட்டு வங்கி அரசியலுக்காக தேசிய பாதுகாப்பை சமரசம் செய்தனர். குண்டுவெடிப்புகள் நாட்டையே உலுக்கின. பயங்கரவாதிகள் பயமே இல்லாமல் தாக்குதல் நடத்தி விட்டு பாகிஸ்தானுக்கு ஓடி விட்டனர். இதற்கு நேர்மாறாக, பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியா கடும் பதிலடி கொடுத்தது.

பயங்கரவாதிகளை ஒழித்தோம்!

உரி தாக்குதலுக்குப் பிறகு, நாங்கள் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினோம். புல்வாமாவுக்குப் பிறகு, நாங்கள் ஒரு வான்வழித் தாக்குதலை நடத்தினோம். மேலும் பஹல்காம் சம்பவத்திற்குப் பிறகு, நாங்கள் ஆப்பரேஷன் சிந்தூரைத் தொடங்கி பாகிஸ்தானின் எல்லைக்குள் நுழைந்து பயங்கரவாதிகளை ஒழித்தோம்.

வாக்காளர் பட்டியல்

பீஹாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது ஊடுருவல்காரர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக ராகுல் அரசியலில் ஈடுபடுகிறார். ராகுல் மற்றும் அவரது கட்சியின் முக்கிய வாக்கு வங்கியாக ஊடுருவல்காரர்கள் இருக்கின்றனர். இவ்வாறு அமித்ஷா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

mayan balraj
ஆக 30, 2025 09:22

HOW BANGLADESH PEOPLE COMING INTO INDIA. WHO IS RESPONSIBLE FOR THIS. WHAT BORDER SECURITY FORCE DOING? WHICH GOVERNMENT IN POER?BJP GOVERNMENT IS RESPONSIBLE FOR THIS.


M Ramachandran
ஆக 08, 2025 22:02

அதனால் தானெ சவுண்ட் உடுறாங்க. அடி மடியிலேயெ கை வச்சுட்டதாலேயே காட்டு கத்தல். கொள்கையில்லாத எதிர்க்கட்சிகள். கல்லாதார் பலர் கூடி காதலுற்றால்போல எதிர் கட்சிகள் நெல்லிக்காய் மூட்டை.


K.n. Dhasarathan
ஆக 08, 2025 21:23

அமித் ஷா நீங்கள் சென்ற முறை ஜெய்த்ததே செல்லாது என்று அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது நீங்கள் தேர்தல் ஆணையத்துடன் கூட்டு சேர்ந்து ஓட்டுக்களை முறைகேடாக பெற்றதற்கு ஆதாரங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. உங்கள் பாய்ச்சலை நீதி மன்றத்தில் காட்ட முடியுமா ?


திகழ்ஓவியன்
ஆக 08, 2025 20:50

அய்யா ELECTION COMMISSON ஒரு ஆடோனோமோஸ் BODY அவர்களை குறை சொன்னால் நீங்கள் ஏன் பதற்றப்படுகிறீர்கள் , அதே போல ஒன்றிய அரசை ராகுல் கேள்வி கேட்டால் நீதிபதி பாடம் எடுக்கிறார் என்ன நடக்குது இந்தியாவில்


திகழ்ஓவியன்
ஆக 08, 2025 20:48

ஒட்டு திருடி வெற்றி இவர்கள் பேசுகிறார்கள்


Mario
ஆக 08, 2025 19:41

"ஒரே நபர், ஒரே முகவரி.. ஆனால் 3 மாநிலங்களில் வாக்களிக்கிறார்.." ஆதாரமாக போட்டோவை வெளியிட்ட ராகுல் இதுக்கு பதில் இருக்கா அமித்ஷா


vivek
ஆக 08, 2025 23:27

மரமண்டை மரியோ அதே தேர்தல் ஆணையம் கையெழுது கேட்டது...போட்டையா


T.sthivinayagam
ஆக 08, 2025 19:35

பத்து ஆண்டுகளாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் அமைச்சருக்கும் ஊடுருவல்கார்ர்கள் பற்றி தெரியாமல் போனது வியப்பாக உள்ளது


Iyer
ஆக 08, 2025 19:04

1 1/2 கோடி பங்களாதேசிகள் மேற்கு வங்கத்தில் மட்டும். 5 கோடி பங்களாதேசிகள் பாரதம் முழுவதும் . முதலில் அவர்களை அடையாளம் கண்டு வோட்டர் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் அடுத்ததாக அவர்களை பங்களாதேஷ்–க்குள் தள்ளிவிடவேண்டும். சிறிதும் கருணையோ அசிரத்தையோ காண்பித்தால் - பாரதம் பாவிகளின் கூடாரம் ஆகிவிடும்


MARUTHU PANDIAR
ஆக 08, 2025 18:25

பங்களா தேஷ் காரன் பங்களா தேஷ் காரன் தான். அவனுக்கு இந்தியாவில் என்ன வேலை என்று கேட்ட ஆளு தான் இந்த 1000 ரூபாய் நோட்டு மெஷின் புகழ் சிதம்பரம். அப்போ அவுரு அமைச்சராம். அது வேற வாய்ன்னா இது ? இப்போ பஹல்கம் தாக்குதல் நடத்தியது உண்மையில் பாகிஸ்தான் காரன் தானான்னு கேக்கற இந்த வாய் ? மக்களே சொல்லுங்கள்.


Gokul Krishnan
ஆக 08, 2025 18:23

Why BCCI given exception from RTI act .. what is the necessity.. bjp party started losing trust among middle class and common public.. all of your actions are showing its corporate party behind running by billionaires ...


ஆரூர் ரங்
ஆக 09, 2025 07:38

பிசிசிஐ எப்போதுமே அரசு அமைப்பல்ல .. தனியார் அமைப்பை RTI இன் கீழ் எப்படி கொண்டு வரமுடியும்?


முக்கிய வீடியோ