உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உளவுத்துறை இயக்குனர் பதவி மேலும் ஓராண்டு நீட்டிப்பு

உளவுத்துறை இயக்குனர் பதவி மேலும் ஓராண்டு நீட்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடெல்லி: மத்திய உளவுத் துறை இயக்குநர் தபன் குமார் டேகாவின் பதவிக்காலம் மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 1988-ம் ஆண்டு ஐ.பி.எஸ். கேடரான தபன்குமார் டேகா, கடந்த 2022-ம் ஆண்டு உளவுத் துறை இயக்குனராக இரண்டு ஆண்டு நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு அவரின் பணிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.தற்போது மீண்டும் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நியமனக் குழு, தபான் குமார் டேகாவின் பதவியை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து ஒப்புதல் அளித்து. இதையடுத்து அவர் 2026 ஜூன் வரை இப்பதவியில் நீட்டிப்பார். அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் நடைபெற்ற செயல்பாடுகளில் நிபுணத்துவம் வாய்ந்தவரான தபன் குமார் டேகா , 20 ஆண்டுகள் உளவுத் துறையின் செயல்பாட்டு பிரிவின் தலைவராக பணியாற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ