உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் தீவிர சோதனை: சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் 83 பேர் கைது

டில்லியில் தீவிர சோதனை: சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் 83 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கிழக்கு டில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.டில்லியில் சட்டவிரோத குடியேற்றம் குறித்து அடிக்கடி சர்ச்சை எழுகிறது. கிழக்கு டில்லியின் கரோல் பாக், லக்ஷ்மி நகர் மற்றும் சீலம்பர் பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில், ஆவணங்கள் இல்லாமல் சிலர் தங்கியிருந்தது தெரியவந்தது.இது தொடர்பாக போலீசார் கூறியதாவது: போலியான ஆவணங்கள் மூலம் இங்கு வேலை பெற்று, கட்டுமான தொழிலாளர்களாகவும், வீட்டு வேலைக்காரர்களாகவும் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து 50 ஆண்கள், 22 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் உள்பட 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள். கைதானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். இதனை தொடர்ந்து வங்கதேச துாதரகத்துடன் தொடர்பு கொண்டு நாடு கடத்தும் செயல்முறை தொடங்கப்படும்.இவ்வாறு போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

venugopal s
ஜூன் 30, 2025 15:01

இதற்கெல்லாம் மூல காரணமான இந்திய எல்லையில் குறட்டை விட்டு கோட்டை விட்ட மத்திய அரசை முதலில் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்!


Iyer
ஜூன் 30, 2025 08:28

* மிக நல்ல செய்திதான். * இதை எல்லா மாநிலங்களும் கடை பிடிப்பது அவசியம். * இதை ஒரு போர்க்கால நடவடிக்கையாக கருதி எல்லா கட்சிகளும் இந்த நடவடிக்கைக்கு SUPPORT கொடுக்கணும் * இந்தியாவில் 5 கோடி சட்டவிரோதக்குடியேறிகள் உள்ளனர். இது நம் எல்லோருக்கும் ஆபத்து


Ramesh Sargam
ஜூன் 29, 2025 22:06

கைது செய்வதெல்லாம் வேஸ்ட். கழுத்தைப்பிடித்து அவர்களை அவர்கள் நாட்டிற்கு அனுப்பவேண்டும்.


Kumar Kumzi
ஜூன் 29, 2025 21:14

இந்தியாவில் இருக்கும் முக்கால்வாசி மூர்க்கனுங்க எல்லாருமே கள்ளக்குடியேறிங்க தான்


Pandi Muni
ஜூன் 29, 2025 20:58

தமிழகத்திலும் மேற்கு வங்கத்திலும் மத்திய அரசு சோதனை மேற்கொண்டு கள்ள குடியேறிகளை வெளியேற்றினால் மட்டுமே ஊழல்வாதிகளை வேரறுக்க முடியும்.