உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐபோன் 17 சீரிஸ் இன்று இந்தியாவில் அறிமுகம்; அதிகாலை முதலே வரிசையில் நிற்கும் மக்கள்

ஐபோன் 17 சீரிஸ் இன்று இந்தியாவில் அறிமுகம்; அதிகாலை முதலே வரிசையில் நிற்கும் மக்கள்

மும்பை: ஐபோன் 17 சீரிஸ் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள நிலையில், அதனை வாங்குவதற்காக மும்பை பிகேசி ஆப்பிள் ஸ்டோரில் இன்று அதிகாலை முதலே மக்கள் வரிசையில் நின்று வருகின்றனர். ஐபோன் 17 சீரிஸ் வரிசையில் ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஏர் என நான்கு மாடல் போன்கள் அறிமுகமாகி உள்ளன. இது கடந்த 9ம் தேதி கலிபோர்னியாவின் கியூபெர்டினோ நகரில் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g95ugxdq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஐஓஎஸ் 26 இயங்குதளத்தில் இந்த போன்கள் வெளியாக உள்ளன. இது ஐபோன் ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த முறை ஐபோன் 17 போன்களின் விலை வழக்கத்தை விட சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 17 சீரிஸ் மாடல்கள் இன்று இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றன. இந்திய ரூபாய் மதிப்பில் ஐபோன் 17 மாடல்களின் விலை ரூ.89,000 முதல் தொடங்கும் என தகவல் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இந்த போனை வாங்குவதற்காக, மும்பை பிகேசி ஆப்பிள் ஸ்டோர் முன்பு மக்கள் குவிந்து வருகின்றனர். நீண்ட வரிசையில் வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மோதல்

இதனிடையே, கூட்டம் அலைமோதிய நிலையில், ஒருவருக்கொருவர் முண்டியடித்து முன்னேறி செல்ல முயன்றனர். அப்போது, சிலருக்கு கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனை காண்ட பாதுகாவலர்கள், உடனடியாக அவர்களை விலக்கி விட்டனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. https://www.instagram.com/reel/DOxcEcFje2Q/?igsh=cXV2djZuN3h3cnd4


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

Ramalingam Shanmugam
செப் 26, 2025 11:09

அப்புடி என்னதான் இருக்கு அதில்


Rathna
செப் 19, 2025 17:55

இன்றய ஜென் ஜீ 20,000 ரூபாய் சம்பளம் என்றால் 5 லக்ஷம் கடன் இருக்கிறது. பல பேருக்கு 5-6 வங்கிகளில் கடன் இருக்கிறது. இதை தவிர மொபைல் போன் மூலம் வாங்கும் கடன். இதனால் பல குடும்பம் தற்கொலை செய்யும் நிலை உள்ளது. 1.75 லக்ஷம் வாங்கிய போனை அடுத்த நிமிடம் திரும்ப கொண்டு குடுத்தால் அதன் விலை 5-10 ஆயிரம். கல்லூரி மாணவர்கள் பெற்றோரை மிரட்டி தவறான வழியில் வாங்குகின்றனர். அடுத்தவனுக்காக வாழும் ஜனங்கள் அதிகமாகி விட்டனர். இதனால் பல குடும்பம் ஆடம்பரத்தில், குடியில், போதை பொருளால் அழியும் நிலைமை அதிகமாகி விட்டது. இது தான் அமெரிக்க மற்றும் மேற்கத்திய கலாச்சாரம். பணம் இல்லாமல் கடன் அட்டையில் கடன் வாங்கி முழுகி போகும் நிலை. பின்னால் கடன் பிரச்சனையால் குடும்பத்தை கொலை செய்வது, குழந்தைகளை கொலை செய்வது நடக்கிறது. மிகவும் தவறான வழியில் இந்தியா செல்கிறது. இது இந்திய, தமிழக கலாச்சாரம் இல்லை.


KOVAIKARAN
செப் 19, 2025 17:19

வாங்கும் சக்தி உள்ளவர்கள் புதிய ஐபோன் வாங்குகிறார்கள். அதற்கு ஏன் இவ்வளவு எதிர்மறையான, மற்றும் சம்பந்தம் இல்லாத விமர்சனங்கள்?


அப்பாவி
செப் 19, 2025 14:39

ஆளுக்கு ரெண்டு போனா வாங்கிக்கோங்க.


RAAJ68
செப் 19, 2025 14:05

பணக்காரர்களின் நகரம் மும்பை. மாதாந்திர ஸ்கூல் பீஸ் கட்டுவதற்கு பணம் இல்லை கேஸ் வாங்க பணம் இல்லை ஏழைக் குழந்தைகள் அம்மணமாக திரிகின்றனர் ஆனால் லட்ச ரூபாய் கொடுத்து மொபைல் வாங்குவதற்கு வரிசையில் நிற்கும் வர்க்கம் வெட்கப்பட வேண்டும்.


shakti
செப் 19, 2025 16:14

உழைத்து சம்பாதித்தவன் வாங்குகிறான் .. உட்கார்ந்து ஓசியில் தின்பவன் வசைபாடுகிறான்


ram
செப் 19, 2025 14:02

இந்தியா ஏழை நம்புங்கள் மக்களே ஆதலால் அரசு இந்த சிறுபான்மை சலுகைகளை நீக்கி விடலாம்.


Sudha
செப் 19, 2025 13:26

வேலை வெட்டி இல்லாத கூட்டம், இதுங்க தான் நாள் முழுக்க வேலை செய்யுற மாதிரி பாவ்லா பண்ணிக்கிட்டு திரியுது


Moorthy
செப் 19, 2025 13:13

ஜென் இசட், ஒரு தனி ஜீன் ,ஜீவன்கள்


MUTHU
செப் 19, 2025 12:43

கொஞ்ச நாள் கழித்து வாங்க வேண்டியதுதானே. தரித்திரம். சினிமாவுக்கு கூட்டம். பிரியாணிக்கு கூட்டம். சினிமாகாரன் பின்னாடி கூட்டம். செல்போனுக்கு கூட்டம். நாடு விளங்கிடும்.


m.arunachalam
செப் 19, 2025 11:38

பூமியில் கால் படாமல் மிதந்து கொண்டிருக்கும் இழி பிறவிகளை என்ன செய்யமுடியும் .


திகழ்ஓவியன்
செப் 19, 2025 12:28

நீங்கள் யாரை சொல்லுகிறேர்


புதிய வீடியோ