உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பம்பையில் ரூ.300ல் இருமுடி கட்டும் வசதி

பம்பையில் ரூ.300ல் இருமுடி கட்டும் வசதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சபரிமலை: பம்பையில் 300 ரூபாய் கட்டணத்தில் 24 மணி நேரமும் இருமுடி கட்டுவதற்காக பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

300 ரூபாய் கட்டணம்

இருமுடி கட்டு எடுத்து வர முடியாத பக்தர்களின் வசதிக்காக பம்பை கணபதி கோயிலின் பின் இருமுடி கட்டுவதற்கு தேவசம்போர்டு வசதி செய்துள்ளது. இதற்காக தேவசம்போர்டு நிர்ணயித்துள்ள 300 ரூபாய் கட்டணத்தை செலுத்தி ரசீதுடன் சென்றால் அங்கு இருக்கும் பூஜாரி இருமுடி கட்டு கட்டி பக்தரின் தலையில் ஏற்றி விடுவார்.இங்கு கட்டப்படும் இருமுடியில் பாலித்தீன் பயன்பாடு இருக்காது. 300 ரூபாய் கட்டணத்தில் ஒரு நெய் தேங்காய் மட்டும் தரப்படும். கூடுதல் நெய் தேங்காய்க்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாத பக்தர்கள் பம்பையில் வந்து ஸ்பாட் புக்கிங் செய்து, இருமுடி கட்டிக்கொள்ளலாம்.

குடிநீர்

பக்தர்களின் வசதிக்காக பம்பை முதல் சன்னிதானம் வரை சபரி தீர்த்தம் என்ற பெயரில் 106 குடிநீர் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதற்காக 35 ஆயிரம் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கும் திறன் கொண்ட பிளான்ட் அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இந்த குழாய்களில் தண்ணீர் பக்தர்களுக்கு கிடைக்கும்.

3000 விளக்குகள்

சன்னிதானம், பம்பை, நிலக்கல் போன்ற இடங்களில் 3000 விளக்குகளை கேரள மின் வாரியம் அமைத் துள்ளது. இதில் எல்.இ.டி. லைட்டுகளும் அடங்கும்.

மீட்பு

நேற்று முன்தினம் இரவு புல்மேடு பாதையில் சன்னிதானத்துக்கு வந்து கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த வருண் 20, கோடீஸ்வரன் 40, லட்சுமணன் 50,ஆகியோர் கழுதைக்குழி என்ற இடத்தில் கால் வலியால் சிக்கிக்கொண்டனர். தீயணைப்பு துறை மற்றும் தேசிய பேரிடர் நிவாரண படையினர் சென்று அவர்களை ஸ்டிரெச்சரில் மீட்டு வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

V Gopalan
நவ 23, 2024 16:25

Its not known as to the Tamilnadu Politicians merely shouting Tamil, Tamil. Devasvom Board of Sabarimala has given tender to remove all the clothes etc from the river pumpa where the devotees will throw all these and the tenderer has dumped in a field near Chinnamanur village Thanks : Makkal TV today through these dumps, certainly diseases will spread. Already, the medical wastes are being dumped near Coimbatore and on the border of Tamilnadu. What the authorities of Tamilnadu border doing or with their knowledge these things are happening. Sand, stones. eggs, veges everything being supplied to Kerala but on the other hand without any gratitude, they return us with wastages. None of the politicians are bothered about nor the medias are exposing.


Ram pollachi
நவ 23, 2024 15:52

அர்ச்சகர் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கி வைப்பதை பார்த்திருக்கிறேன்... இருமுடி கட்டி வழி அனுப்புவது குருசாமிகள் கடமை இந்த காலத்தில் எப்படி எப்படியோ போகுது.


வைகுண்டேஸ்வரன்
நவ 23, 2024 07:59

10, 12 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ரெடி மேட் இருமுடி கொச்சினில் கிடைக்கிறதே. சனிக்கிழமை காலையில் குளித்து விட்டு, இருமுடி வாங்கிக்கொண்டு, நேரே சபரிமலை க்கு 7 மணிக்கு வண்டியை விட்டால், 4 மணிநேரத்தில் பம்பா. குளித்து, சாப்பிட்டு விட்டு, மலையேறி தரிசனம் மாலை 4, 5 மணியளவில் முடித்து, கீழே வந்து இரவு 9 மணிக்கு வண்டி எடுத்தால் 2, 3 மணிக்கு கொச்சின். இப்படித்தான் கேரளாவில் நிறைய பேர், கிறிஸ்தவர், முஸ்லிம்கள் உட்பட போய் வருகிறார்கள். மலையில் மழுமழுவென்று shave செய்த பக்தர்கள் பார்க்கலாம். அவர்கள் அநேகமாக மலையாளிகளாக இருப்பார்கள். 48 நாள் விரதம், no s, haircutting எல்லாம் கேரளாவில் அநேகமாக இல்லை.


புதிய வீடியோ