உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டசபை தேர்தல் முறைகேட்டுக்கு தேர்தல் கமிஷனும் உடந்தையா? மீண்டும் கேட்கிறார் ராகுல்

சட்டசபை தேர்தல் முறைகேட்டுக்கு தேர்தல் கமிஷனும் உடந்தையா? மீண்டும் கேட்கிறார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் நடந்த முறைகேட்டுக்கு தேர்தல் கமிஷனும் உடந்தையா? என காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் தொகுதியில் ஆறு மாதங்களில் 29 ஆயிரத்து 219 வாக்காளர்கள் அதிகரித்துள்ளதாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டி, ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலின் போது முதல்வர் பட்னவிஸ் போட்டியிட்ட தொகுதியில் முறைகேடு நடந்துள்ளது. ஐந்தே மாதங்களில் பட்னவிஸ் போட்டியிட்ட நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் வாக்காளர் எண்ணிக்கை 8 சதவீதம் அதிகரித்தது எப்படி? இந்த தொகுதியில் தினசரி 162 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் சில வாக்குச்சாவடிகளில் 50 சதவீதம் வரை வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது எப்படி?6 மாதத்தில் 29,219 வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முன்பின் அறிமுகம் இல்லாத பலர் ஓட்டளித்தனர் என வாக்குச்சாவடி முகவர்கள் கூறி இருக்கின்றனர். ஆயிரக்கணக்கான வாக்காளர்களுக்கு வீட்டு முகவரியை உறுதிப்படுத்தப்படவில்லை என்று ஊடகங்கள் அம்பலப்படுத்தி உள்ளன. ஒரு தொகுதியில் வாக்காளர் எண்ணிக்கை 4 சதவீதத்துக்கு மேல் அதிகரித்தாலே அது பற்றி தேர்தல் கமிஷன் விசாரணை நடத்த வேண்டும். மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் நடந்த முறைகேட்டுக்கு தேர்தல் கமிஷனும் உடந்தையா? தேர்தல் கமிஷன் மவுனம் காப்பது ஏன்? டிஜிட்டல் வடிவ வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடிகளில் பதிவு செய்யப்பட்ட சி.சி.டி.வி., காட்சிகளை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். சமீபத்தில், மஹாராஷ்டிரா தேர்தல் முடிவு தொடர்பாக ராகுல் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு தேர்தல் கமிஷன் விளக்கமளித்தது. ஆனால், இதனை ஏற்காத ராகுல், உண்மையை வெளியிட வேண்டும் என்றார். 'மஹாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தில்லுமுல்லு நடந்ததாக காங்., எம்.பி., ராகுல் புகார் கூறுவது, முற்றிலும் அபத்தமானது' என தேர்தல் கமிஷன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பதிலடி

இதற்கு விளக்கமளித்து தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாவது: ஆலோசனைக்கு ராகுலை அழைத்தோம். ஆனால், அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. ராகுலை சந்தித்து விளக்கம் அளிக்க தயாராக உள்ளோம். அவர் குறிப்பிடும் எந்த நாளிலும் சட்டசபை தேர்தல் நடைமுறைகள் குறித்து விளக்க தயாராக உள்ளோம்.. அனைத்து தேர்தல்களும் சட்டவிதிகளின்படியே நடக்கிறது. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதனை தீர்த்து வைக்கிறோம். தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் வேட்பாளர்கள் நீதிமன்றத்தை நாடி உள்ளனர். இவ்வாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Palanisamy T
ஜூன் 26, 2025 08:08

நியாயமான கேள்வி? தேர்தல் ஆணையம் பதில் சொல்ல கடமைப் பட்டுள்ளது.


Yaro Oruvan
ஜூன் 24, 2025 21:44

எல்லாரும் பாத்துக்கோங்க...நானும் அரசியல்வியாதிதான் நானும் அரசியல்வியாதி தான்... நானும் கருத்து சொல்லுவேன் நானும் கருத்து சொல்லுவேன்...எல்லாரும் பாத்துக்கோங்க...எல்லாரும் பாத்துக்கோங்க...


Yaro Oruvan
ஜூன் 24, 2025 21:42

யாரிந்த அம்பி ?? அப்பப்ப டிவிலயும் நியூஸ் பேப்பர்லயும் வந்து போவுது ??? பெத்தவங்க பாத்து எதாவது வைத்தியம் செய்யப்புடாதா ?


தத்வமசி
ஜூன் 24, 2025 21:39

நீங்களும் உங்கள் கட்சியும் வெல்லும் போது இனிக்கிறது. தோற்கும் போது கசக்கிறது.


பேசும் தமிழன்
ஜூன் 24, 2025 20:08

தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால்... அது மக்களின் தீர்ப்பு..... நாங்கள் தோல்வி அடைந்தால்.... அது முறைகேடு..... இப்படிக்கு இத்தாலி பப்பு.


Venukooppal,S
ஜூன் 24, 2025 20:01

ராவுள் அனைத்து எம் எல் ஏ, எம் பீ க்கள் ராஜினாமா செய்து மறுமுறை தேர்தலில் வென்று தாம் சொன்னவைகளை மெய்ப்பிக்க வேண்டும். செய்ய மாட்டார் பப்பு


தாமரை மலர்கிறது
ஜூன் 24, 2025 19:41

உலகிலேயே நாணயமான நேர்மையான தேர்தல் ஆணையம் இந்தியாவில் தான் உள்ளது. ராகுலுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. பப்புவை ஜெயிக்க முறைகேடு செய்யவேண்டுமா என்ன? வோட்டிங் மெஷின் இருப்பதால், கள்ளஓட்டு போடமுடியவில்லை என்ற கவலையில் அவர் உள்ளார். இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இப்படியே புலம்பிக்கொண்டிருக்க வேண்டியது தான். ஜெயிக்க வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை.


GoK
ஜூன் 24, 2025 19:17

கீறல் விழுந்த ரெக்கார்டு


மனிதன்
ஜூன் 24, 2025 19:06

ராகுல் கேட்கும் கேள்வியில் இருக்கும் உண்மையை புரிந்துகொள்ளாமல் அல்லது அதற்கு பதிலளிக்காமல், தனிமனித தாக்குதலில் ஈடுபடும் இவர்களை என்னவென்று சொல்வது??


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஜூன் 24, 2025 19:40

என்ன மூரக்ஸ் எரியுதா? தீயமுக 50 தொகுதில தேர்தல் ஆனையர் சாஹு தயவுல ஜெயிச்சிச்சின்னு அதிமுக சொன்ன போது என்னமா கேலி பண்ணீங்க? இப்பவும் கூட தீயமுக ஜெயிக்க போகும் தொகுதிகள் வோட்டு மெஷின் தயவில் தன


பேசும் தமிழன்
ஜூன் 24, 2025 20:12

ஆனாலும் இவரை பாராட்டியே தீர வேண்டும்.... வாங்கும் 200 ரூபாய்க்கு என்னமா முட்டு கொடுக்கிறார்.... இத்தனைக்கும் கருணாநிதி அவர்கள் கூடா நட்பு கேடாய் முடியும் என்று சொன்ன கட்சி தலைவருக்காக.... இப்படி முட்டு கொடுக்கும் உங்களை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.


V Venkatachalam
ஜூன் 24, 2025 20:30

ஒரே ஒரு உண்மைதான். எந்த வழியில் போனாலும் மோடியை தாக்கி பேசணும்.. தான் ஒரு ராஜா வீட்டு கண்ணு குட்டின்னு நினைக்கிறவர் இந்த பப்பு.. அவருக்கு முதலில் ஒழுங்கா பேச தெரியுமா? இவருக்கு பதில் அவசியம் தேவையா?


Ashok Subramaniam
ஜூன் 24, 2025 20:39

இவருக்காக தேர்தல் கமிஷன் அவர் வீட்டுக்குச் சென்று விளக்கமளிக்கவேண்டுமா? நீதிமன்றங்கள் வளையவேண்டுமா? செவிடன் காதில் கூட செய்திகள் சென்றடையலாம்...ஆனால் செவிடுபோல் நடிப்பவர்கள் காதில்...? உங்கள் காது கேக்"காது" எப்போதும்...


Suppan
ஜூன் 24, 2025 20:42

இதிலெங்கே உண்மை இருக்கிறது? தேர்தல் கமிஷன் பல முறை பதில் கூறிவிட்டது. ராகுல் கோயபெல்ஸ் ஆகிவிட்டார்.


nagendhiran
ஜூன் 24, 2025 17:01

ஏன்டா பப்பு மேற்குவங்களத்தில் நடப்பது மம்தா ஆட்சி? அங்கு மாநில அரசு ஊழியர்கள்தான் தேர்தல் வேலையை பார்க்குறார்கள்? அவ்ரகள் எப்படி பாஜகவிற்கு ஆதரவா வேலையோ? தில்லுமுல்லோ செய்ய முடியும் பப்பு வாதத்திற்கே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை