உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நான் கொடுத்த கிட்னி அசுத்தமா? லாலுவின் மகள் ரோகிணி உருக்கம்

நான் கொடுத்த கிட்னி அசுத்தமா? லாலுவின் மகள் ரோகிணி உருக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: “என் அப்பாவுக்கு என் சிறுநீரகத்தை தானம் கொடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்ய வைத்தேன், இன்று அதே சிறுநீரகம் ஒரு சாபக்கேடு என்று எனக்குச் சொல்லப்படுகிறது,' என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா உருக்கமாக தெரிவித்துள்ளார்.பீஹார் தேர்தலில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் படுதோல்வியை சந்தித்த நிலையில், லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யா, அரசியலையும், குடும்பத்தையும் விட்டு விலகுகிறேன் என அறிவித்தார். தேர்தல் தோல்வியால், தேஜஸ்வி மற்றும் ரோகிணி இடையே பிரச்னை, வாக்குவாதம் ஏற்பட்டதால் ரோகிணி இந்த முடிவை எடுத்தாக கருதப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z5kjqzpg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இச்சூழலில் தம்மை கட்டாயப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றியதாக ரோகிணி ஆச்சாராயா தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: குடும்பத்தினர் தன்னை அவமதித்தனர். மோசமான வார்த்தைகளால் திட்டினர், ஒரு கட்டத்தில் செருப்பால் அடிக்க அவர்கள் ஓங்கினர்.உண்மை, சுயமரியாதையை விட்டுக்கொடுக்கவில்லை. அந்த அவமானத்தை தாங்கி கொள்ள வேண்டியிருந்தது. பெற்றோர் லாலு- ராப்ரி மற்றும் சகோதரிகள் அழுது கொண்டிருக்க, கட்டாயப்படுத்தி தாய்வீட்டில் இருந்து பிரித்து விட்டார்கள். என்னை அனாதையாக விட்டுவிட்டார்கள். நீங்கள் ஒருபோதும் என்னை போல் தவறு செய்ய கூடாது. ரோகிணியை போல மகள் எந்த குடும்பத்திலும் இருக்க கூடாது. இவ்வாறு ரோகிணி கூறியுள்ளார்.

கிட்னி அசுத்தமா?

மற்றொரு பதிவில், 2022ல் தந்தை லாலு பிரசாத்துக்கு சிறுநீரக தானம் கொடுத்ததை பற்றி மனதை புண்படுத்தும் வகையில் குடும்பத்தினர் பேசியதாக ரோகிணி கூறியுள்ளார்.அதில், 'என்னை அவர்கள் சபித்தனர். கோடிக்கணக்கான பணம் மற்றும் லோக்சபா சீட் வாங்கிக்கொண்டு கிட்னி கொடுத்ததாகவும், அது அசுத்தமான கிட்னி என்று குடும்பத்தினர் திட்டினர். திருமணமான அனைத்து மகள்கள், சகோதரிகளுக்கு ஒன்றை சொல்கிறேன். உங்களுக்கு சகோதரன் இருந்தால், நீங்கள் கடவுளாக நினைக்கும் தந்தையை கூட காப்பாற்ற நினைக்காதீர்கள். சகோதரன் அல்லது அவருடைய நண்பர்களுடைய கிட்னியை தானம் தரச்சொல்லுங்கள். என் கணவர் மற்றும் குடும்பத்தினர் அனுமதி இல்லாமல் சிறுநீரகம் தானம் செய்தது பெரும் பாவம் ஆகிவிட்டது. நான் கடவுளாக நினைக்கும் அப்பாவை காப்பாற்ற நான் கொடுத்த சிறுநீரகத்தை அசுத்தம் என்கிறார்கள். உங்களில் யாரும் என்னை போல் தவறு செய்துவிடக்கூடாது. இவ்வாறு ரோகிணி ஆச்சார்யா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

theruvasagan
நவ 17, 2025 22:17

ஊரான் சொத்தை பொது சொத்தை தவறான வழியில் தனதாக்கிக் கொண்டு ஊழலில் திளைக்கும் யாரும் தர்மத்தின் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது. குடும்பத்தையும் பின்வரும் தலைமுறைகளையும் தாக்கும். சொத்துக்களை தலைமுறைகள் அனுபவிப்பது போல பாவத்தையும் சுமக்க வேண்டிவரும். கர்மா விடாது துரத்தும்.


bharathi
நவ 17, 2025 16:39

The whole family is .....


Rameshmoorthy
நவ 17, 2025 12:47

Just relax and do your doctor profession , help needy and god will bless you, karma will chase those who did wrong actions


நடராஜன்
நவ 17, 2025 12:23

விதி வலியது. கடுமையான ஊழல் செய்த லாலுவின் குடும்பம் சின்னாபின்னம் ஆகிறது. இது ஒரு தொடக்கமே. தனது வாழ்வை முடியும் முன்னர் லாலு தன் குடும்பம் அழிவதை தன் கண்ணாலே பார்க்க முடியும். பொது மக்களுக்கு செய்த துரோகத்திற்கு இதுதான் இறைவனின் தண்டனை. நானும் நீண்ட நாள் வாழ்ந்து இந்த அனுபவத்தை பெற இறைவனை பிரார்த்திப்போம்


Muralidharan S
நவ 17, 2025 12:02

இங்கு ஒரு தலைவரின் காலத்திற்கு பிறகு இதுமாதிரி எல்லாம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தருணத்தில், எல்லாம் வெகு amicable ஆக, வெளியே கொஞ்சம் கூட சத்தம் வராமல் இன்றுவரை போய்க்கொண்டு இருக்கிறது... அப்படியே ஏதாவது சண்டை சச்சரவு ஆனாலும்.. சிலநாட்களில் கண்கள் பனித்தன.. இதயம் கனத்தது என்று வசனங்கள் பேசி சரிசெய்த்துக்கொண்டு விடுவார்கள்.... இந்த குடும்பத்தின் சாணக்கியத்தனம் / சாமர்த்தியம், பீஹார் குடும்பத்திற்கு இல்லை போல இருக்கிறது......


Muralidharan S
நவ 17, 2025 11:44

ஊழல் செய்து கொள்ளை அடித்து பலதலைமுறைகளுக்கு சொத்துக்குவிக்கும் அரசியல் வியாதிகள் நிலைமை கடைசி காலத்தில் இப்படித்தான் இருக்கும்.. உடலில் ஒவ்வொரு பாகமாக செயல் இழக்கும்.. ஆட்டோமொபைல் பார்ட்ஸ் வாங்குவது போல கொள்ளையடித்த காசை கொண்டு வாங்கமுடியும் பாகங்களை விலைகொடுத்து வாங்கி அது உடலுக்கு பொருந்தினால், பிட் செய்துக்கொண்டு வாழவேண்டும்.. இல்லையேல் ஒவ்வொன்றாக செயலிழந்து சுயநினைவிழந்து இறுதிவரை இருக்கவேண்டி இருக்கும்.... பெற்ற குழந்தைகளுக்கும் வம்சாவழியாக இந்த நிலைமை தொடரவே செய்யும்... கூட இருப்பவர்கள், சொந்தங்கள் பந்தங்கள் கொள்ளையடித்து ஊழல் செய்து சொத்துக்கு அடித்துக்கொண்டு குடும்பமே சின்னாபின்னமாக சிதறும்.. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், இதை எல்லாம் கண்கூடாக பார்த்துக்கொண்டு இருக்கும் பல அரசியல் வியாதிகள், தங்களுக்கு இது மாதிரி எல்லாம் எதுவும் நேராது... எல்லாம் பணத்தை வீசி சரி செய்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து ஊழல் செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.... கர்மவினை எப்பொழுதும் விடாது...


SUBBU,MADURAI
நவ 17, 2025 11:08

This is the best punishment for Lalu Yadav everyone must leave him during his lifetime.


ஆரூர் ரங்
நவ 17, 2025 09:17

எம்ஜிஆருக்கு அண்ணன் மகள் டாக்டர் லீலாவதி சிறுநீரக தானம் அளித்தார். கைம்மாறு எதனையும் எதிர்பார்க்கவில்லை. கட்சியும் கண்டு கொள்ளவில்லையே.


Sureshkumar
நவ 17, 2025 09:01

சகோதரி கவலை வேண்டாம், இன்று உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் , ஒரு நாள் உங்களை கொண்டாடும் நாள் வரும். ஓம் சாந்தி.


oviya vijay
நவ 17, 2025 08:47

வினை விதைத்தவன் வினை அறுப்பான். கர்மா...ஊரை அடித்து உலையில் போட்டு கொழுத்த வாழ்க்கை வாழ்ந்து விட்டு இப்போ கர்மாவின் பூமரான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை