உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஈரானைத் தொடர்ந்து இஸ்ரேல்; இந்தியர்களை மீட்கும் பணி தீவிரம்

ஈரானைத் தொடர்ந்து இஸ்ரேல்; இந்தியர்களை மீட்கும் பணி தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் போர் நடத்தி வரும் நிலையில், அந்நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இஸ்ரேல் - ஈரான் போர், நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இரு நாடுகளும் ஏவுகணையை கொண்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரான் அணுசக்தி நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பது உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, ஈரானில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வந்த மத்திய அரசு, தற்போது இஸ்ரேலில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் அனைவரையும், 'ஆபரேஷன் சிந்து' திட்டத்தில் மீட்டு அழைத்து வர ஏற்பாடு செய்தது. தற்போது, 18,000 இந்தியர்கள் இஸ்ரேலில் வசித்து வருகின்றனர்.இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியதாவது; இஸ்ரேலில் இருந்து வர விரும்பும் இந்தியர்களை ஒரு வாரத்திற்குள் மீட்டு கொண்டு வரவேண்டும். அவர்களை எல்லைக்கு அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு மீட்டு வரப்படுவார்கள். வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இந்தியா வர விரும்புவோர் உடனடியாக, இந்திய தூதரகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இஸ்ரேலில் உள்ள தூதரக எண்களான +972 54-7520711, +972 54-3278392 மற்றும் cons1.mea.gov.inஎன்ற இமெயில் முகவரியை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
ஜூன் 23, 2025 09:51

இப்பிடியே வெளிநாட்டிலிருந்து கூட்டி வந்தால் ஒரு ரெண்டு, மூணு கோடி தேறும் போலிருக்கே


Ramesh Sargam
ஜூன் 22, 2025 20:27

உக்ரைன்-ரஷ்யா போர், இந்தியா-பாக்கிஸ்தான் போர், இப்பொழுது ஈரான் - இஸ்ரேல் போர். அடுத்து எந்த நாட்டில்? போரில்லாமல், பேச்சுவாத்தையால் சமரசம் காணமுடியாதா? காண முடியும். என்ன பிரச்சினை என்றால், ஒவ்வொரு நாடும் தாங்கள் சேர்த்துவைத்திருக்கும் ராணுவ உபகரணங்கள் துருப்பிடித்து போகிறது. அவற்றை முறையாக பயன்படுத்த ஒவ்வொரு நாடும் போரில் இறங்குகின்றன. அவ்வளவுதான். அந்த ராணுவ உபகரணங்களை தயாரித்து மற்ற நாடுகளுக்கு விற்கும் அமெரிக்க போன்ற நாடுகள் போரை ஆதரிக்கின்றன. இதில் இப்பொழுதுள்ள அமெரிக்க அதிபருக்கு நோபல் அமைதி பரிசு வேண்டுமாம்.


புதிய வீடியோ