உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இஸ்ரேல் -ஹமாஸ் போர் நிறுத்தம்; காசா மக்கள் கொண்டாட்டம்: இந்தியா வரவேற்பு

இஸ்ரேல் -ஹமாஸ் போர் நிறுத்தம்; காசா மக்கள் கொண்டாட்டம்: இந்தியா வரவேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு, இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது.மேற்காசிய நாடான பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேலுக்குள் புகுந்து, 2023ம் ஆண்டு, அக்., 7ல் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் இறந்தனர். நுாற்றுக்கணக்கான இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.இதையடுத்து, துவங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போர், 15 மாதங்களாக நீடித்து வந்தது. காசாவில் 15 மாதங்களாக நீடித்து வரும் போரை நிறுத்த ஹமாஸ் - இஸ்ரேல் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் காசாவில் பரிதவித்து வந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் இன்று கொண்டாடி மகிழ்ந்தனர். இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு, இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது; பிணை கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் மற்றும் காசாவில் போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம்.இது காசா மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் மனிதாபிமான உதவிக்கு வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அனைத்து பிணை கைதிகளையும் விடுவிக்கவும், போர்நிறுத்தம் வேண்டுமென்றும், நாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

அப்பாவி
ஜன 16, 2025 20:08

நான் சொல்லித்தான் போர் நின்னுதுன்னு அடிச்சு உடலாமே ஜீ.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜன 16, 2025 22:13

மத்திய அரசின் திட்டங்கள் நம் திட்டம் என்று ஸ்டிக்கர் ஒட்டுவது நம் குலத்தொழில் அல்லவா உடன் பிறப்பே...!!!


சண்முகம்
ஜன 16, 2025 19:51

எல்லா இசுலாமிய நாடுகளும் கை கழுவிய காஸா சரணடைய வேண்டியது தான்.


Sridhar
ஜன 16, 2025 19:32

கடைசியில் இஸ்ரேல் தோற்றது. ஒரு ஆண்டுக்கு மேலாக போரிட்டும் பணய கைதிகளை மீட்கமுடியவில்லை. காட்டுமிராண்டிகளிடம் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து எஞ்சிய பணயக்கைதிகளை திரும்பி பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இந்த போருக்கு பிறகாவது தீவிரவாதிகள் பாடம் கற்றுக் கொள்வார்களா? அப்பகுதி மக்கள் தங்கள் தீவிரவாத மனப்பான்மையை கைவிட்டு மனிதர்கள் போல் நடந்து கொள்வார்களா? போரின் தீவிரமும் கடும்துயரங்களும் இப்போது கொஞ்சமாவது புரிந்திருக்கும். அடுத்த தலைமுறையினரையாவது நல்ல மனிதர்களாக வளர்க்கவேண்டும். பேசாமல் இஸ்ரேலே அவர்களை எடுத்துக் கொள்வது சிறப்பாக இருக்கும்.


Vijay D Ratnam
ஜன 16, 2025 17:17

இதுல என்ன கொண்டாட்டம் வேண்டிக்கிடக்கு. காஸாவை இஸ்ரேல் தரை மட்டமாக்கி விட்டது. படிப்பறிவில்லாத இஸ்லாமிய பயங்கரவாதிகள் இஸ்ரேலை சீண்ட போய், இஸ்ரேல் போட்ட போடில் காசா உருக்குலைந்து சின்னாபின்னம் ஆகி இருக்கிறது. இப்போது அங்கே கரண்ட் தண்ணீர் உணவு சாலைவசதி வேலைவாய்ப்பு, மருத்துவம், சுகாதாரம் பள்ளிகள் என்று எதுவும் இல்லை. காஸாவில் 90 சதவிகித கட்டிடங்கள் குண்டுகள் விழுந்து நொறுங்கி போய் விட்டது. நரகம் போல காட்சியளிக்கிறது. காசா மக்கள் கொண்டாட்டமாம். மிச்சம் மீதி இருப்பவர்கள் இனி பட்டினியில் சாகப்போகிறார்கள். இவ்வளவுக்கும் காரணமான இஸ்லாமிய பயங்கரவாதிகளை இஸ்லாமியர்களே அடித்து கொன்றால் ஒழிய இந்த பிரச்சினைக்கு முடிவே கிடையாது.


ராமகிருஷ்ணன்
ஜன 16, 2025 14:56

ஹமாஸ் தீவிரவாதிகள் கொஞ்சம் பிரேக் விட்டு, தயார்படுத்திக் கொண்டு மீண்டும் வாலாட்டினால் இஸ்ரேல் மொத்தமாய் முடித்து விட வேண்டும்.


Kumar Kumzi
ஜன 16, 2025 14:46

எத்தனை நாளைக்குனு


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 16, 2025 14:32

கொஞ்சநாள் கழிந்து திரும்பவும் இஸ்ரேலிடம் வம்பிழுத்து அவன் திருப்பியடிச்சா உலக இஸ்லாமிய நாடுகளிடம் கெஞ்சி கதறி அழுவானுங்க .....


அன்பே சிவம்
ஜன 16, 2025 14:01

வரவேற்கத்தக்கது! நல்ல முடிவு நல்ல செயல். 1).பாலஸ்தீன மக்களின் தற்போதைய பரிதாப நிலமை இது. பாவம்!!!2).தீவிரவாதத்திற்கு இடம் கொடுத்தால் இந்த நிலமை. 3).பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு நமது மனமார்ந்த இரங்கல்கள். 4).மறுபுறம் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னர் யூதர்கள் middle East முழுவதுமாக வாழ்ந்தனர் என்று வரலாறு சொல்லுகிறது. 5).காலத்துக்கு தகுந்த மாற்றங்களை செய்து கொண்டு வாழ பழகிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் இந்த கொடுமைகளை நமது குடும்பம் தான் அனுபவிக்கும். 6).தற்போதைய சூழ்நிலையில் இஸ்ரேல் அதாவது யூதர்கள் வலுவான நிலையில் உள்ளதால் பாலஸ்தீனம் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டியது நன்மை உண்டாகும். 7).முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது ஒரு பழமொழி என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. 8).இந்தியாவிற்கு எல்லா நாடுகளும் நண்பர்களே. Russia France Israel நெருங்கிய நண்பர்கள். 9).சொல்லப்போனால் யூதர்,கிறிஸ்டியன், இஸ்லாம் அண்ணன் தம்பிகள். Abrahamic Religions are:Judaism, Christianity, and Islam are brotherhood religions. 10).மூத்தவர் யூதர்கள், அடுத்தவர் Christian, அதற்கு அடுத்தவர் இஸ்லாம். 11).பாலஸ்தீனத்தை நாடுடாக முதலில் ஓத்து கொண்டு நாடுகளில் இந்தியாவும் ஓன்று. 12).தற்பொழுதும் மருத்துவ உதவிகளை இந்தியா செய்து வருகிறோம். 13).Middle East நாடுகள் இவர்களுக்கு சோறு போடலாம். அவர்கள் இடம் இல்லாத பணமா? 14).பார்க்க பாவமாக உள்ளது?? பாவம் இந்த பெண்கள் ! ஈஸ்வரா இவர்களை காப்பாற்று!!!


Kasimani Baskaran
ஜன 16, 2025 13:51

சும்ம்மா கிடந்த இஸ்ரேலை சீண்டி 1200 பேரை பிடித்துக்கொண்டு போய் பல்லாயிரம் பேர்களை இழந்து மொத்த உட்கட்டமைப்பையும் சேதமாக்கி பாலஸ்தீனத்தை அரை நூற்றாண்டு பின்னோக்கி செலுத்தி இருக்கிறது ஹமாஸ். இதோடு முடிந்து விடும் என்று நான் நினைக்கவில்லை.


SUBRAMANIAN P
ஜன 16, 2025 13:44

போர் நிறுத்தம் நல்ல செய்திதான். முதல்ல எதுக்குடா போர் செய்தீங்க. ஆயிரக்கணக்கான அப்பாவிமக்களை கொன்னுட்டீங்களே. அவங்க உயிரையும், உடமைகளையும் உங்களால இப்போ திருப்பி குடுக்கமுடியுமா. லூசுப்பையக. நாடு பிடிக்க பேராசைப்படும் இவனுங்க எல்லாம் ஒட்டுமொத்த பூமியின் கேடுகாலம் சைத்தான்கள் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை