உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போர் பதற்றம்: போதுமான கச்சா எண்ணெய் இருக்கிறது

போர் பதற்றம்: போதுமான கச்சா எண்ணெய் இருக்கிறது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இஸ்ரேல்- ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், 'இந்தியாவில் வரவிருக்கும் மாதங்களுக்கு போதுமான கச்சா எண்ணெய் உள்ளது' என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால், கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 77 டாலர் என்ற நிலையை எட்டி உள்ளது.ஈரானில் அணு ஆயுத மையங்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்கி வருவது தொடர்பாக அதிகாரிகளுடன் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியாவில் சிறப்பான எரிசக்தி உத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எரிசக்தி பொதுத்துறை நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.வரவிருக்கும் மாதங்களுக்கு போதுமான கச்சா எண்ணெய் இருப்பில் உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். உலகின் மிகப்பெரிய எரிசக்தி விநியோகப் பகுதிகளில், பதற்றங்கள் நீடித்து வரும் நிலையில் இந்தியாவில் போதுமான பெட்ரோல், டீசல், சமையல் காஸ் உள்ளிட்டவை இருப்பில் உள்ளது என ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தாமரை மலர்கிறது
ஜூன் 14, 2025 01:28

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இருபது சதவீதம் உடனடியாக உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு கண்டிப்பாக இதை செய்யவேண்டும். மானிய விலையில் கொடுத்தால், நாடு திவாலாகிவிடும்.


Nada Rajan
ஜூன் 13, 2025 23:20

அதான் பெட்ரோல் விலை அதிகமாக இருக்கிறதே....


vivek
ஜூன் 14, 2025 08:04

டாஸ்மாக் இருக்கும்போது உனக்கென்ன கவலை நடக்காத ராஜா