பிரதமர் மோடியிடம் விளக்கிய இஸ்ரேல் பிரதமர்
பிரதமர் மோடியிடம் விளக்கிய இஸ்ரேல் பிரதமர்
ஈரானின் அணு ஆயுத தளங்கள், ஏவுகணை உற்பத்தி மையங்கள் மீதான தாக்குதலின் நோக்கம் குறித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரதமர் மோடியை தொடர்புகொண்டு விளக்கம் அளித்தார்.
இந்த தாக்குதல் குறித்து சர்வதேச நாடுகளின் தலைவர்களை தொடர்புகொண்டு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசி வருகிறார். பிரதமர் மோடியுடனும் தொலைபேசியில் நேற்று பேசினார்.அவரிடம் பிரதமர் மோடி, பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவில் சரிசெய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். நிதானத்தை கடைபிடிக்கும் படியும், பதற்றத்தை குறைக்கும் படியும் கூறினார்.