உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இஸ்ரோ தலைவர் சோம்நாத் பணி ஓய்வு; பொறுப்பேற்றார் நாராயணன்!

இஸ்ரோ தலைவர் சோம்நாத் பணி ஓய்வு; பொறுப்பேற்றார் நாராயணன்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீஹரிகோட்டா: பணி ஓய்வு பெறும் இஸ்ரோ தலைவர் சோம்நாத், புதிய தலைவராக நியமிக்கப்பட்ட நாராயணனிடம், தனது பொறுப்புகளை ஒப்படைத்து விடைபெற்றார்.இஸ்ரோவின் தலைவராக இருந்த சோம்நாத் பதவி காலம் நிறைவடைந்தது. இதையடுத்து புதிய தலைவராக வி. நாராயணனை மத்திய அரசின் நியமனக்குழு தேர்வு செய்தது. தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலட்டுவிளை என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் நாராயணன். இவர் ஏழை குடும்பத்தில், மறைந்த வன்னியபெருமாள், எஸ்.தங்கம்மாள் ஆகியோரின் மூத்த மகன் ஆவார். தமிழ் மீடியத்தில் படித்து இவ்வளவு தூரம் உயர்ந்த நாராயணனே பல்வேறு தரப்பினர் பாராட்டினர். இந்நிலையில் பணி ஓய்வு பெறும் இஸ்ரோ தலைவர் சோம்நாத், புதிய தலைவராக நியமிக்கப்பட்ட நாராயணனிடம், நேற்று 13ம் தேதி தனது பொறுப்புகளை ஒப்படைத்து விடைபெற்றார். பணி ஓய்வு பெற்ற சோம்நாத்துக்கு, இஸ்ரோ அலுவலர்கள் அனைவரும் பிரியா விடை கொடுத்தனர்.நாராயணன் தலைவராக பொறுப்பேற்றதன் மூலம் இஸ்ரோவில் புதிய அத்தியாயம் துவங்கியுள்ளது. இவர், இஸ்ரோ தலைவர் பதவியுடன், மத்திய அரசின் விண்வெளித்துறை செயலாளராகவும் பதவி வகிப்பார்.இவர், 2 ஆண்டுகள் வரையில் இந்த பதவிகளில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர் ஜி.எஸ்.எல்.வி., எம்.கே-3 , கிரயோஜெனிக் இன்ஜின் உள்ளிட்ட திட்டங்களுக்கு முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Mohammed Jaffar
ஜன 14, 2025 16:45

வாழ்த்துக்கள் .. இன்னும் நமது நாட்டின் பெருமை உலகறிய செய்ய வேண்டும். பொங்கல் நல்வாழ்த்துக்கள்


Raj
ஜன 14, 2025 13:29

திரு. நாராயணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.


Duruvesan
ஜன 14, 2025 13:22

... தான் காரணம் என உருட்டுவானுங்க


Ramesh Sargam
ஜன 14, 2025 12:45

பணி ஓய்வு பெறும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் அவர்கள், இன்றைய இளைஞர்களுக்கு, மாணவர்களுக்கு தனித்துவமாக விண்வெளி பற்றிய விஷயங்களை அறிவுரையாக வழங்கவேண்டும். விஞ்ஞானிகளுக்கு ஓய்வென்பதே இல்லை. புதிய தலைவர் நாராயணனுக்கு வாழ்த்துக்கள்.