உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விண்ணில் பாய்ந்தது அமெரிக்க செயற்கைக்கோள் புளூபேர்ட்; இஸ்ரோ சாதனை

விண்ணில் பாய்ந்தது அமெரிக்க செயற்கைக்கோள் புளூபேர்ட்; இஸ்ரோ சாதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது நிருபர்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (டிசம்பர் 24) காலை 8.54 மணிக்கு எல்.வி.எம்., 3 ராக்கெட் வாயிலாக, 'புளூபேர்ட்' செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது. திட்டமிட்டபடி துல்லியமாக சுற்று வட்டபாதையில் செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டது என இஸ்ரோ தெரிவித்தது.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, இன்று டிசம்பர் 24ம் தேதி காலை, 8:54 மணிக்கு, எல்.வி.எம்., 3 ராக்கெட் வாயிலாக, 'புளூபேர்ட்' செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. செயற்கைக்கோள் திட்டமிட்ட தாழ்வட்டப் பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன் மூலம், இஸ்ரோவின் கனரக ஏவுகணை திறன் உலகளவில் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.https://www.youtube.com/embed/ibeV57L1DRAஇந்த 'புளூபேர்ட்' செயற்கைக்கோளை அமெரிக்காவை சேர்ந்த ஏ.எஸ்.டி., நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக உருவாக்கி இருக்கிறது. இதன் எடை 6,500 கிலோ. இது, தொலைதுார கிராமங்களுக்கு, மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும்.இந்த செயற்கைக்கோளை, நம் நாட்டின், 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையம், விண்ணில் செலுத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

திட்டம் வெற்றி

இது குறித்து இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது: இன்று நாங்கள் எல்விஎம்-3 எம்6 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உள்ளோம். இது அமெரிக்காவின் ப்ளூபேர்ட் பிளாக்-2 என்ற வணிகத் தொடர்பு செயற்கைக்கோளை, திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தியுள்ளது. இது எல்விஎம்-3 ராக்கெட்டின் ஒன்பதாவது வெற்றிகரமான ஏவுதலாகும். இந்த திட்டம் வெற்றி அடைந்ததன் வாயிலாக 100 சதவீதம் நம்பகத்தன்மை நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த எல்விஎம்-3 எம்6 ராக்கெட் வாயிலாக, இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஏவுதல்களும் வெற்றிகரமாக அமைந்துள்ளன. இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்ட செயற்கைக்கோள்களிலேயே இதுதான் மிகவும் அதிக எடை ஆகும். நாங்கள் இந்த செயற்கைக்கோளை 1.5 கிலோமீட்டருக்கும் குறைவான துல்லியத்துடன் விண்ணில் செலுத்தியுள்ளோம். நாங்கள் இந்த ராக்கெட்டின் பேலோட் திறனை தோராயமாக 150 கிலோகிராம் மேம்படுத்தியுள்ளோம். இது இந்தியாவில் ககன்யான் திட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்களை ஏற்றிச் செல்லக்கூடிய ராக்கெட் ஆகும். இவ்வாறு நாராயணன் கூறினார்.அமெரிக்க செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவியதை தினமலர் நேரலை ஒளிபரப்பு செய்தது.வீடியோ வாயிலாக பார்க்க இங்கே கிளிக் செய்யவும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Suresh R
டிச 24, 2025 16:12

க்ரீட்டிங்ஸ் டு இஸ்ரோ team


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 24, 2025 13:34

பலருக்கும் ஜெலுசில் தேவைப்படும் ....


Anand
டிச 24, 2025 12:17

வாழ்த்துக்கள்.


S.L.Narasimman
டிச 24, 2025 11:15

நமது விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்.


karupanasamy
டிச 24, 2025 11:00

முட்டாப்பய இதற்கும் 21ம் பக்கத்தில் பர்த்சர்டிபிகேட் கொடுத்தவர் தான் காரணம்னு சொல்லுவான்.


Anand
டிச 24, 2025 12:18

சொறி ஈரவெங்காயம் தான் காரணம்.


நாஞ்சில் நாடோடி
டிச 24, 2025 10:27

பெருமை மிகு பாரதம்...


NALAM VIRUMBI
டிச 24, 2025 10:15

ஆத்மார்த்தமான பாராட்டுக்கள் இஸ்ரோவுக்கு. நம் இஸ்ரோ உலகில் எந்த நாட்டிற்கும் சளைத்தது அல்ல. மேலும் பல சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்


loga perumal
டிச 24, 2025 09:43

வெற்றி


shyamnats
டிச 24, 2025 09:42

மென்மேலும் வளர, சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்


ASIATIC RAMESH
டிச 24, 2025 09:40

சாதனைகளுக்கு வாழ்த்துக்கள்...


முக்கிய வீடியோ