உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஸ்பேடெக்ஸ் ஒருங்கிணைப்பில் இஸ்ரோ வெற்றி; விண்வெளியில் சரித்திரம் படைத்தது இந்தியா

ஸ்பேடெக்ஸ் ஒருங்கிணைப்பில் இஸ்ரோ வெற்றி; விண்வெளியில் சரித்திரம் படைத்தது இந்தியா

பெங்களூரு: விண்வெளியில் இரண்டு செயற்கைகோள்களை இணைக்கும் 'டாக்கிங்' செயல்முறை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம், செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைத்த 4வது நாடு என்ற சாதனையை இந்தியா படைத்தது. சர்வதேச விண்வெளி மையத்தைப் போல, வரும் 2035ம் ஆண்டுக்குள் தனி விண்வெளி மையத்தை அமைக்க இந்தியா முயற்சித்து வருகிறது. மேலும், ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்ட பணிகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0qa4jisq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இத்தகைய பணிகளுக்கு, விண்வெளியில் இரு விண்கலன்களை இணையச் செய்யும் டாக்கிங் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். இதற்கான முன்னோட்டமாக, பி.எஸ்.எல்.வி., சி 60 ராக்கெட் மூலம் அனுப்பிய இரு செயற்கை கோள்களை விண்வெளியில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டிருந்தது. தலா 220 கிலோ எடை கொண்ட சேஸர், டார்கெட் ஆகிய இந்த ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் முதலில் ஜனவரி 7ம் தேதி இணையச் செய்வதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் ஒருங்கிணைக்கும் திட்டம் தள்ளிப்போனது. தொடர்ந்து, அனைத்து சென்சார்களும் மதிப்பீடு செய்யப்பட்டு, படிப்படியாக, ஸ்பேடெக்ஸ் விண்கலன்களை இணைப்பதற்கான தூரம் குறைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று (ஜன.,16) விண்வெளியில் இரண்டு செயற்கைகோள்களை இணைக்கும் 'டாக்கிங்' செயல்முறை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், 'விண்கலன்களை இணையச் செய்யும் வரலாற்று நிகழ்வு வெற்றி பெற்றுள்ளது. விண்வெளியில் டாக்கிங் செய்த 4வது நாடு இந்தியா,' எனக் குறிப்பிட்டுள்ளது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து, செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணையச் செய்த 4வது நாடு என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. சரித்திர சாதனை படைத்த இந்திய விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ புதிய தலைவர் நாராயணன் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

பிரதமர் மோடி வாழ்த்து

விண்வெளியில் இரண்டு விண்கலன்களை இணையச் செய்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள். இந்த சாதனை, இந்தியாவின் வருங்கால விண்வெளித் திட்டங்களுக்கு உதவும் ஒரு படிக்கல்லாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

என்றும் இந்தியன்
ஜன 16, 2025 16:30

வெற்றி அணி பணி தொடர வாழ்த்துக்கள் ஆசீர்வாதங்கள்


karupanasamy
ஜன 16, 2025 15:38

பொறக்காசு ராஜ் இப்போது ஆசனவாயில் மிளகாய் வைத்ததைப்போல் உணர்வான்.


GV.kumar Singapore
ஜன 16, 2025 14:19

வாழ்த்துக்கள் ISRO


பிரேம்ஜி
ஜன 16, 2025 14:16

அருமையான சாதனை! வாழ்த்துக்கள்!


Kasimani Baskaran
ஜன 16, 2025 13:27

பாரத் மாதா கி ஜெய் இந்தத்திட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் சிறப்பான பாராட்டுகள்.


Ramesh Sargam
ஜன 16, 2025 12:55

அனைத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துக்கள். நீங்கள் விண்ணையும் தாண்டி சாதனை செய்து உலகப்புகழ் பெற வாழ்த்துகிறேன்.


நாஞ்சில் நாடோடி
ஜன 16, 2025 12:18

பாரத் மாதா கி ஜெய்


duruvasar
ஜன 16, 2025 11:53

போராளிகள் , தேவைப்படும் ஜெலுசில் யை ஸ்டாக் செய்து கொள்ளவும்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 16, 2025 11:44

ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், ரோபாடிக்ஸ் மற்றும் ஸ்பேஸ் டைனமிக்ஸ் விற்பன்னர்களின் கூட்டு சாதனை முயற்சி வெற்றி பெற்றதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பாரதத்திற்கு பெருமை சேர்த்த நல்லவர்களுக்கு நன்றிகள்.


Duruvesan
ஜன 16, 2025 11:43

எல்லாம் வல்ல ஈசனின் அருள் உங்களுக்கு என்றும் உண்டாகட்டும், வாழ்த்துக்கள்


சமீபத்திய செய்தி