உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டியது நமது கடமை: ராகுல் பேச்சு

அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டியது நமது கடமை: ராகுல் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: '' அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரின் கடமை,'' என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.பாட்னாவில் நடந்த மாநாட்டில் ராகுல் பேசியதாவது: காங்கிரசும், இந்திய மக்களும் இணைந்து அரசியலமைப்பை உருவாக்கி உள்ளனர். அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரின் கடமை. அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட போது, நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. அதற்கு பிறகு தான் சுதந்திரம் கிடைத்தது என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். இதன் மூலம் அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என மோகன் பகவத் வெளிப்படையாக கூறுகிறார். பா.ஜ.,வும் ஆர்.எஸ்.எஸ்.,ம் அரசியலமைப்பு மீது தாக்குதல் நடத்துகின்றன. பா.ஜ., கூட்டணி அரசு, பீஹார் மாநிலத்தை தொழிலாளர் தொழிற்சாலையாக உருவாக்கி உள்ளனர். மக்கள் கடினமாக உழைத்து, சம்பாதித்து ஜிஎஸ்டி செலுத்துகின்றனர். ஆனால், பிரதமர் மோடி, அந்த பணத்தை 20-25 கோடீஸ்வரர்களுக்கு கொடுக்கிறார்.இவ்வாறு ராகுல் பேசினார்.

போலி

முன்னதாக அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாட்டில் ராகுல் பேசியதாவது: நாட்டின் உண்மையான சூழ்நிலையை தெரிந்து கொள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பீஹாரில் நடத்தப்பட்டது போல் போலியான கணக்கெடுப்பு நடத்தக்கூடாது. இதற்காக தனியாக கொள்கை வகுக்க வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான சட்டத்தை பார்லிமென்டில் காங்கிரஸ் கொண்டு வரும். இட ஒதுக்கீட்டிற்கான 50 சதவீதம் என்ற உச்சவரம்பை அகற்றுவோம். இவ்வாறு ராகுல் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

Mohan
ஜன 19, 2025 14:08

ஏனுங்க காங்கிரஸ் கட்சியில இருக்கறவுங்க, படிச்சவுங்க தானே சாதாரணமான பொது அறிவு கூட இல்லாதவங்க மாதிரி, ராகுலின் உளறல்களை கேட்டும் அவமானப்படாம எப்படி இருக்காங்க ?? தெரிலப்பா . 1975 ம் வருடத்துல எமர்ஜென்சி கொண்டு வந்து. அரசியலமைப்பை ரத்து செய்து இந்திராவும், காங்கிரஸ் காரங்களும் ஆடிய ஆட்டத்தையும், அதற்கு ஜால்ரா அடித்தவங்க பண்ணுன கூத்துகளை எவரால மறுக்க இயலும்?? ராகுலுக்கும், காங்கிரஸ் தலைவராக இருக்கற எவருக்கும் அரசியலமைப்பைப்பற்றி பேசும் தகுதியே இல்லை ஏதோ ஒரு புத்தகத்தை காட்டி பேசுவது, மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜகவை எதிர்க்க துப்பு இல்லாமல், இந்திய அரசாங்கத்தையே ஒழிக்கப்போவதாக சவால் விடுகிறார் ராகுல் காந்தி.


Rajasekar Jayaraman
ஜன 19, 2025 12:05

பாகிஸ்தானுக்கான அரசியலமைப்பு பாரதத்துக்கு தேவை இல்லடா பொறம்போக்கு.


வாசகர்
ஜன 19, 2025 10:47

முதலில் ஹின்டன் பார்க் அதானி. இப்ப அரசியலமைப்ப காப்பாத்த போறார். இப்ப 10 வருசமா தான் அரசியலைமப்பு மிக பாதுகாப்பா இருக்கு. உலக அரசியலில் உச்சபட்ச சிரிப்பு அரசியல்வாதி. மக்களே உஷார். சிரியா, லெபனான், போன்று நம் நாட்டின் ஸ்திரத்தன்மையை சிதைத்து விடுவார் இவரும் இவரது கூட்டனிகளும்


பேசும் தமிழன்
ஜன 19, 2025 09:24

அந்நிய கைக்கூலி.... சீனா.... ஜார்ஜ் சோரஸ்..... ஹிண்டன்பர்க்.... போன்ற ஆட்கள் போடும் பிச்சைக்காக.... வாலை ஆட்டி கொண்டு இருக்கிறார்..... ஆனால் இந்திய மக்கள் விவரமானவர்கள்.... அதனால் தான் இவனது கட்சியை தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக விரட்டி அடித்து விட்டார்கள்.


ராமகிருஷ்ணன்
ஜன 19, 2025 07:20

வம்சாவளி அமைப்பு, வாரிசு அரசியல் அமைப்பு மட்டுமே தெரிந்த உனக்கு அரசியல் அமைப்பு என்றால் என்னவென்று தெரியுமா ? இனியும் காங்கிரஸ் உன் குடும்பத்தை தூக்கி வைத்துக் கொள்ள மாட்டார்கள்


Matt P
ஜன 19, 2025 05:28

அரசியல் கொள்ளையர்களிடம் இருந்து தங்களைஏ பாதுகாத்து கொள்ள வேண்டியது மக்க்களின் கடமை.


J.V. Iyer
ஜன 19, 2025 04:38

ஜனவரி 20 ம் தேதிக்குப்பிறகு இந்த ஜார்ஜ் சோரஸ் அடிமை இதுபோல பேசினால், அவன் கொடுத்த பணம் இன்னும் இவரிடம் இருக்கிறது என்று பொருள். யாராவது இந்த அடிமையிடம் இந்திய அரசியலமைப்பற்றி கேள்வி கேளுங்களேன், இவர் பதில் சொல்கிறாரா என்று.


vijay
ஜன 19, 2025 02:08

ஏனுங்க எம்.பி உங்க பாட்டி எமெர்ஜெண்சி கொண்டாந்து மொத்த ஜனநாயகத்தையும் குழிதோண்டி புதைச்சது உலகறிந்த விஷயம். அந்த காலகட்டத்தில் கூடவே அரசியலமைப்பு சட்டத்தில் சிலவற்றை நீக்கியும், சேர்த்தும், மாற்றங்கள் செஞ்சதும் தெரிந்ததே. எப்படி இப்படி ஏக்கர்கணக்கில் பொய்களை பேச தில்லு இருக்கு? ஆச்சரியமா இருக்கப்பா. ஆனால் காங்கிரஸின் அடிமை தொண்டர்களுக்கு உரைக்காது, மண்டைல ஏறவும் செய்யாது.


பேசும் தமிழன்
ஜன 19, 2025 00:50

அரசியலமைப்பை உங்களிடம் (கான் கிராஸ் கட்சி) இருந்து தான் ....நாட்டு மக்கள் பாதுகாக்க வேண்டும்.


Barakat Ali
ஜன 18, 2025 22:11

இந்த ஈ வேற குறுக்க மறுக்க பறந்துக்கிட்டு இருக்கு .........


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை