உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கண்ணியத்தின் எல்லையைத் தாண்டினால் அது தவறு: பிரதமர், தாயார் குறித்து அவதூறு பேச்சுக்கு ஒவைசி கண்டிப்பு

கண்ணியத்தின் எல்லையைத் தாண்டினால் அது தவறு: பிரதமர், தாயார் குறித்து அவதூறு பேச்சுக்கு ஒவைசி கண்டிப்பு

புதுடில்லி: பிரதமர் மோடி மற்றும் அவரது தாயார் குறித்து காங்கிரஸ் பேரணியில் அவதூறாக பேசியதற்கு, ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர், கண்ணியத்தின் எல்லையைத் தாண்டினால் அது தவறு என கண்டித்தார்.காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மறைந்த தாயாரை மோசமான வார்த்தைகளால் திட்டிய வீடியோ வைரலானது. அவதூறாக பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இது குறித்து, ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d7k434ub&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எதிர்க்கலாம், விமர்சிக்கலாம், எவ்வளவு வேண்டுமானாலும் கண்டிக்கலாம். ஆனால் நீங்கள் கண்ணியத்தின் எல்லையைத் தாண்டினால் அது தவறு. விவாதம் கொச்சையாக மாறும். பிரதமரை விமர்சிக்கலாம், ஆனால் அநாகரீகமான வார்த்தைகளால் விமர்சிக்க வேண்டாம். கண்ணியமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். கண்ணியத்தின் எல்லையை மீறினால் அது தவறு, அதைச் செய்யக்கூடாது. இதை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு ஓவைசி கூறியுள்ளார்.

நடந்தது என்ன?

பீஹாரில் தேர்தல் கமிஷனுக்கு எதிராக காங்கிரஸ் எம்பி ராகுல் மேற்கொண்டு வருகிறார். தர்பங்காவில் யாத்திரையின் போது, சில காங்கிரஸ் தொண்டர்கள் பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தினர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அதில் ராகுல், பிரியங்கா மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோரின் போஸ்டர்கள் மேடையில் காணப்பட்டன. இந்த அவதூறு பேச்சுக்கு எதிராக பாட்னாவில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் பாஜ புகார் அளித்ததுடன், காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரி உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Abdul Rahim
செப் 02, 2025 12:47

நாகரீகத்தை பற்றி யாரிடம் பேசுகிறீர்கள் மிஸ்டர் ஒவைசி இதே நீங்கள் மோடியை எதிர்த்து நாகரீகமான முறையில் பேசிய அத்தனைக்கும் இதே பகுதியில் இந்த சங்கிகள் உங்களை உங்கள் மதத்தை வைத்து வசைபாடிய அனைத்தையும் தொகுத்து வழங்கட்டா? வக்பு திருத்த சட்ட மசோதா தாக்கலின் போது நீங்கள் கண்ணாடியை கழட்டி உங்கள் முகத்தை துடைக்க இந்த யானசூனிய சங்கிகள் பாகிஸ்தானின் உளவாளி அழுகிறான் பாருங்கள் என எழுதினார்கள் அப்படிப்பட்ட கெடுமதி கொண்டவர்கள் இந்த சங்கிகள் என்னதான் நீங்க இவனுங்களுக்கு சப்போர்ட்டா பேசினாலும் அவனுங்க தங்களது மத வெறி புத்தியை மறைக்க மாட்டார்கள்.


K V Ramadoss
செப் 02, 2025 15:07

அப்துல் ஒவைசி யின் நாகரீகம் உங்களுக்கு வரவே வராது


V RAMASWAMY
ஆக 30, 2025 10:21

ஒவைசி அவர்கள் மிக நாகரிகமாக உண்மையை தைரியத்துடன் எடுத்துரைக்கிறார். வெரி குட்.


Abdul Rahim
செப் 02, 2025 15:51

நாகரீக மனிதர்களிடம் என்னுடய நாகரீகம் வெளிப்படும் வி ராமசாமி உங்களை போன்ற அநாகரீக சந்தர்ப்பவாத நபர்களிடம் எதற்க்காக நாகரீகம் ???


RAJ
ஆக 30, 2025 02:28

ஒவைசி தேசப்பற்று மிக்கவர்.. பக்கிஸ்தானை வெளுத்து வாங்கிய உயர்ந்த மனிதன்.. ..


Tamilan
ஆக 30, 2025 00:24

ஆப்கானிஸ்தானிலுள்ள தலியங்கள்தான் பிரதமரை விட கண்ணியமானவர்கள் என்று கூற மறந்துவிட்டாரோ


Tamilan
ஆக 30, 2025 00:23

இந்துக்கள் இந்தியர்கள் ஒவைசியிடமிருந்தான் கண்ணியத்தை கற்றுக்கொள்ளவேண்டுமோ ?. இந்து மதவாதிகள் தஞ்சமடைய எங்கெல்லாம் இடம் தேடி அலைகிறார்கள்


ManiMurugan Murugan
ஆக 29, 2025 23:28

எந்த அரசியல் மாநாடு என்றாலும் கண்ணியம் வேண்டும் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோகன் கட்சி தி மு கா கூட்டணி மாநாடு நடத்தினார் களை இல்லை எதாவது திரைப்படம் ஒலிபதிவா


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 29, 2025 21:54

எடப்பாடியாரின் தாயார் மறைந்தபோது திமுகவின் ஆ. ராசா அவரைப்பற்றி பேசியதை கூட்டணி தர்மத்தின்படி காங்கிரசுக்கு திமுக விட்டுக்கொடுத்திருக்கும்.


RAJ
ஆக 29, 2025 21:35

தாயை அவமதிக்கும் கேவலமான பிறவிகள் ...


MOHAMED Anwar
ஆக 29, 2025 21:35

இவர் பிஜேபி - யின் ஜால்ரா.


xyzabc
ஆக 30, 2025 03:11

ஜால்ராவா? உன் அம்மாவை பற்றி பேசினால் சும்மா இருப்பாயா? அசுத்தமான வாய்.


Sun
ஆக 29, 2025 21:07

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பாடத்தை பீகார் காரர்களுக்கு கத்துக் கொடுத்தாச்சு.


சமீபத்திய செய்தி