உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அருவருப்பாக உள்ளது!

அருவருப்பாக உள்ளது!

காங்கிரசின் தாஜா செய்யும் அரசியலால், பயங்கரவாதத்தின் பேரழிவை நம் நாடு எதிர்கொண்டு வருகிறது. ஆனால், கொஞ்சம் கூட தயக்கமின்றி, பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக அக்கட்சியின் மூத்த தலைவர் சிதம்பரம் பேசுகிறார். இதை கேட்கவே அருவருப்பாக உள்ளது. என்ன மாதிரியான மனநிலை இது? கிரிராஜ் சிங் மத்திய அமைச்சர், பா.ஜ.,

அனைத்து கட்சி கூட்டம்!

டில்லி கார் குண்டுவெடிப்பு குறித்து விவாதிக்க, அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு உடனடியாக கூட்ட வேண்டும். பயங்கரவாத தாக்குதல்களின்போது, அரசுக்கு எப்போதும் உறுதுணையாக இருந்துள்ளோம்; எதிர்காலத்திலும் இருப்போம். அதே சமயம், இது யாருடைய தோல்வி என்று அரசிடம் கேள்வி எழுப்புவதும் எங்களது கடமை. பவன் கெரா செய்தித் தொடர்பாளர், காங்.,

ஒருபோதும் ஏற்க முடியாது!

டில்லி கார் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டோருக்கு மிக கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இதில், எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், ஒட்டுமொத்த ஜம்மு - காஷ்மீர் மக்களையும் பயங்கரவாத ஆதரவாளர்களாக முத்திரை குத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது. ஒமர் அப்துல்லா ஜம்மு - காஷ்மீர் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை