உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 16வது நாளை எட்டியது ஜக்ஜித் சிங்கின் உண்ணாவிரதம்

16வது நாளை எட்டியது ஜக்ஜித் சிங்கின் உண்ணாவிரதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர் : விளைபொருட்களுக்கு எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாபைச் சேர்ந்த விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால், 70, நடத்தி வரும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நேற்று 16வது நாளை எட்டியது.வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம்; விவசாய கடன் தள்ளுபடி; விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்., 13 முதல், 'டில்லி சலோ' போராட்டத்தை, ஹரியானா - பஞ்சாப் எல்லைகளான ஷம்பு, கானவுரி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.இந்த போராட்டத்தால், டில்லியின் எல்லைகளில் கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஷம்பு எல்லையில் இருந்து டில்லிக்கு செல்ல முயன்ற விவசாயிகள் மீது, கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் தடுத்து நிறுத்தினர். பஞ்சாபைச் சேர்ந்த விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால், நவ., 26ல், கானவுரி எல்லையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினார். இந்த போராட்டம் நேற்று 16வது நாளை எட்டியது. உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள ஜக்ஜித் சிங் தலேவால், 11 கிலோ எடை குறைந்துள்ளார். அவரது ரத்த சர்க்கரை அளவு ஏற்ற, இறக்கமாக உள்ளது. அவரது உடல்நிலையை டாக்டர்கள் குழு அருகிலிருந்து கண்காணித்து வருகிறது. இதற்கிடையே, மத்திய அரசுடன் பேச்சு நடத்த வரும்படி, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ரவ்னீத் சிங் நேற்று விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அ.மு. நடராசன். அறங்காவலர். விநாயகர் கோவில் பழையூர் அனுப்பட்டி.
டிச 12, 2024 15:32

ஊருக்கே சோறு போடும் விவசாயி உணவின்றி சாகக் கிடக்கிறார். ஒன்றிய அரசே விவசாயிகளின் சாபம் பொல்லாதது. எங்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி எங்களை வாழ விடு. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம். ஒருங்கிணைப்பாளர். பல்லடம் மேற்கு. அனுப்பட்டி கிளை.


ஆரூர் ரங்
டிச 12, 2024 10:55

மட்டமான தரமற்ற தானியங்களை அரசுக்கு விற்க முயலும் ஆட்களை பட்டினி போகலாமா கூடாதா? பஞ்சாபில் விளையும் பெருமளவு தரமற்ற கோதுமையைக் கூட வேறு வழியின்றி அரசு கொள்முதல் செய்து மக்கவிட்டு பிறகு கிலோ ஒரு ரூபாய்க்கு சாராய ஆலைகளுக்கு விற்கிறதாம். இந்த வீணான தானிய உற்பத்தி செலவில் பாதியளவு அரசு மானிய உரம், பூச்சி மருந்து, களைக் கொல்லி மின்சாரம், பாசன நீர் போன்றவையும் அடக்கம். இதில் அதிக பலனடைந்து வருவது தானிய கமிஷன் ஏஜெண்ட்களே. இப்படி மற்ற ஏழைகளின் வரிப்பணத்தை வீணாக்குவதற்கு பதில் இவர்களுக்கு 100 நாள் வேலைத்திட்டம் போதும்.


angbu ganesh
டிச 12, 2024 10:44

ஒருத்தன் ஒரு நாள் சாப்டா விட்டாலே ஒரு மாதிரி ஆகிடும் அதும் தினம் நல்ல தின்று கொழுத்த ஒருவன் 16 நாள் எல்லாம் chancey இல்ல நாடகம் பொய் எதுக்கு இந்த வேஷம் எல்லாம்னு தெரியல


R.RAMACHANDRAN
டிச 12, 2024 08:46

இந்த நாட்டில் நேர்மைக்கு இடம் இல்லை.லஞ்சம்/ஆளும் அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுப்பவர்கள் மட்டுமே பயனடைகின்றனர்.


ஜெய்ஹிந்த்புரம்
டிச 12, 2024 07:55

பாலிவுட் கூத்தாடிகளுடன் கூத்தடிக்கிறார்.


நிக்கோல்தாம்சன்
டிச 12, 2024 06:18

தேர்தலில் பெட்ரா தோல்வியை மறைக்க ஏழைபாழை சிங்கு ஆடும் கபடநாடகம்


Kasimani Baskaran
டிச 12, 2024 05:50

கூலிக்கு ஆட்களை பிடித்து நாடகம் போட காங்கிரஸ் நாடகக்கம்பெனிக்கு சொல்லியா கொடுக்கவேண்டும்.


Rpalni
டிச 12, 2024 05:34

அரை நாள் உண்ணாவிரத போராட்டம் ஞாபகம் வருதே துணைவி இணைவி அணைவி சமேதரையாய் நான்கு புறமும் பேன் ஓடிக்கொண்டிருக்க உண்ணாவிரத ட்ராமாவை மறக்க முடியாது


J.V. Iyer
டிச 12, 2024 04:49

நல்லது, அவருக்கு. இவரால் நாட்டிற்கு என்ன பயன்? போனால் போகட்டும் போடா...


புதிய வீடியோ