உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆப்கனில் மீண்டும் இந்திய தூதரகம் திறக்கப்படும்: ஜெய்சங்கர் அறிவிப்பு

ஆப்கனில் மீண்டும் இந்திய தூதரகம் திறக்கப்படும்: ஜெய்சங்கர் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''ஆப்கானிஸ்தானின் காபூலில் இந்தியா மீண்டும் தூதரகத்தை திறக்கும்'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமிர்கான் முட்டாகி இந்தியா வந்துள்ளார். டில்லியில் அமிர்கான் முட்டாகியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். அப்போது இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் ஜெய்சங்கர் கூறியதாவது:ஆப்கானிஸ்தானின் காபூலில் இந்தியா தனத தூதரகத்தை மீண்டும் திறக்கும்.இந்தியா ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான நட்பு உறவின் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது. ஆப்கன் வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்திய பயணம் இருநாடுகளுக்கு இடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்தும். பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பூகம்பங்களின் போது நாங்கள் ஒருவருக்கொருவர் பேசுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்திற்கு இந்தியா முழுமையாக உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.

நெருங்கிய நண்பர்

ஆப்கன் வெளியுறவுத்துறை அமைச்சர் அமிர்கான் முட்டாகி கூறியதாவது: ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது முதலில் உதவி செய்த நாடு இந்தியா. ஆப்கானிஸ்தான் இந்தியாவை நெருங்கிய நண்பராக பார்க்கிறது. வர்த்தகம் மற்றும் இருநாடு மக்களுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்த விரும்புகிறோம். ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து எந்த தீய சக்தியும், இந்தியாவிற்கு எதிராக செயல்பட அனுமதிக்க மாட்டோம். டில்லியில் இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர்கான் முட்டாகி, காபூல் தனது பிரதேசத்தை யாருக்கும் எதிராகப் பயன்படுத்த அனுமதிக்காது என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் காபூலில் தலிபான் அமைப்பினரின் மறைவிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய நிலையில் முட்டாகி தெரிவித்துள்ளார்.கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான் அமைப்பு கைப்பற்றிய பிறகு இந்தியா தூதரகங்களை மூடியது. தற்போது 4 ஆண்டுகளுக்கு மீண்டும் காபூலில் தூதரகம் திறக்கப்படும் என்ற அறிவிப்பு, இந்தியா- ஆப்கானிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் என சர்வதேச அரசியல் வல்லுநர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

தாமரை மலர்கிறது
அக் 10, 2025 18:49

தாலிபானுடன் நல்லுறவு பேணுவது, இந்தியாவில் பயங்கரவாதத்தை தடுக்கும்.


sankaranarayanan
அக் 10, 2025 18:23

ஆப்கானிஸ்தானின் காபூலில் இந்தியா மீண்டும் தூதரகத்தை திறக்கும் நல்ல செய்தி விரைவிலேயே இதை அமல் படுத்துங்கள் பாகிஸ்தானின் அட்டூழியங்களை அகற்றுங்கள் பாகிஸ்தானுக்கு அமெரிக்க அதிபரின் ராணுவ தளவாடங்களை அனுமதிப்பை தவிடு மண்ணாக்குங்கள்


அப்பாவி
அக் 10, 2025 18:17

மூர்க்கம் மாறிடிச்சா அங்கே?


vivek
அக் 10, 2025 20:24

நீ எப்பவும் மாறமாட்டாய் கோவாலு ..உன் வளர்ப்பு அப்படி


vee srikanth
அக் 10, 2025 16:47

நம்பும்படியாக ஆட்கள் இல்லை அவர்கள்


Zi King
அக் 10, 2025 16:25

We should sell few Brahmos to Afghan people, may be at discounted price. Let them also donate few to friends in Pakistan just like we did during operation sindhoor.


JAYACHANDRAN RAMAKRISHNAN
அக் 10, 2025 15:13

இந்தியாவின் சனாதன மனிதாபிமான சிந்தனை செயல்கள் அனைத்து சமூகத்தினரையும் அனைத்து செல்லும் குணம் எப்பொழுதும் தலைநிமிர்ந்து நிற்கும். சமிபத்திய சமூக வலை தள காணொளியில் இந்திய பைக் ரைடரை பாஸ்போர்ட் முதலிய ஆவணங்கள் சோதிக்காமல் தாலிபான்கள் அனுமதித்தது இது தான் உண்மையான மதச்சார்பின்மை என்று உலகிற்கு பறைசாற்றியது.


கடல் நண்டு
அக் 10, 2025 15:07

பக்கிஸ்தான் வண்டியில் சூடு வைத்தாயிற்று .. இந்திய அரசின் ராஐதந்திர நடவடிக்கை வரவேற்க்கத்தக்கது ..