உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜனார்த்தன ரெட்டி கார் பறிமுதல் 

ஜனார்த்தன ரெட்டி கார் பறிமுதல் 

கொப்பால் : முதல்வர் சித்தராமையா கடந்த 5 ம் தேதி, கொப்பால் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். பயணத்தை முடித்துவிட்டு, பல்லாரி ஜிண்டால் விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது முதல்வர் சென்ற கார், பாதுகாப்பு வாகனத்திற்கு எதிர் திசையில், கங்காவதி சுயேச்சை எம்.எல்.ஏ.,வும், பா.ஜ., பிரமுகருமான ஜனார்த்தன ரெட்டி அமர்ந்திருந்த, 'ரேஞ்ச் ரோவர்' கார் வந்தது.இதனால் ஒரு நிமிடம், முதல்வர் கார் நின்று சென்றது. இடையூறு ஏற்படுத்தும் வகையில், கார் ஓட்டியதாக ஜனார்த்தன ரெட்டியின் டிரைவர் மீது, கங்காவதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று பெங்களூரு சென்ற கங்காவதி போலீசார், ஜனார்த்தன ரெட்டியின் ரேஞ்ச் ரோவர் காரை பறிமுதல் செய்து, கங்காவதிக்கு கொண்டு சென்றனர்.இதுகுறித்து ஜனார்த்தன ரெட்டி கூறுகையில், '' சித்தராமையா அரசியல் ரீதியாக எனக்கு பிரச்னை கொடுத்தாலும், முதல்வர் என்ற முறையில் அவருக்கு மதிப்பு கொடுப்பேன். பல்லாரி வீட்டில் ஹோமம் நடந்ததால், காரில் அவசரமாக சென்றோம். ''அரை மணி நேரமாக முதல்வரின் பாதுகாப்பு வாகனத்திற்காக காத்து இருந்தோம். ஆனால் வரவில்லை. முதல்வர் வருவதற்குள் சென்று விடலாம் என்று தான் சென்றோம். நான் முட்டாள் இல்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

HoneyBee
அக் 09, 2024 09:34

முதல்வர் வாகனத்தை ஆம்புலன்ஸ் முந்தி சென்றால் அதையும் கைப்பற்றுமா இந்த கான்ங்கிரஸு ஆட்சி


VENKATASUBRAMANIAN
அக் 09, 2024 08:39

முதல்வர் நின்று செல்ல மாட்டாரா. மக்கள்தான் நிற்க வேண்டுமா


sankaranarayanan
அக் 09, 2024 07:40

அடுத்தவர்களுக்கு வழிவிடுவதுதான் அமைச்சரின் அழகு கடமை இவர் மாலையில் வருவாரென்று கூறி காலையிலேயே அந்த பாதைகளை முடக்குவது முடவன் தேனுக்கு ஆசைப்பட்டது போலத்தானுகும் தாமதமாக அந்த அட்னஹா அமைச்சரின் காரணி ஏன் பறிமுதல் செய்யாக்கூடாது


Rajan
அக் 09, 2024 06:41

இப்படி ஒரு பிழைப்பு தேவையா - கான் கட்சி ஏதாவது ஒரு சாக்கு கிடைத்தால் வழக்கு போடுகிறது. எங்கே ஜனநாயகம் படுகொலை நாயகன்?


நிக்கோல்தாம்சன்
அக் 09, 2024 05:39

முதல்வர் என்பவருக்கு கொம்பா முளைத்துள்ளது , எப்போது அவர் சாலையில் சென்றாலும் எல்லாரும் காத்திருந்து நேரத்தை தொலைக்க வேண்டியுள்ளதே ?


முக்கிய வீடியோ