உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திமுகவின் அறிவாலயத்தைக் காப்பாற்றிக் கொடுத்ததே ஜெயலலிதா தான்: இபிஎஸ் சுளீர்

திமுகவின் அறிவாலயத்தைக் காப்பாற்றிக் கொடுத்ததே ஜெயலலிதா தான்: இபிஎஸ் சுளீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குன்னூர்: திமுகவுக்கு சோதனை வந்தபோது, கட்சி அலுவலகத்தை பிரிந்து சென்றவர்கள் கைப்பற்ற நினைத்தபோது, அதைக் காப்பாற்றிக் கொடுத்தது ஜெயலலிதா தான் என்பதை மறந்துவிடாதீர்கள் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், குன்னூரில் திரண்டு இருந்த கூட்டத்தினர் மத்தியில் பேசினார். அப்போது இபிஎஸ் பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வந்து 52 மாதம் முடிந்தது, இன்னும் 7 மாதமே இருக்கிறது. குன்னூருக்கு ஏதாவது பெரிய திட்டம் வந்திருக்கிறதா? விலைவாசி விண்ணை முட்டும் அளவு உயர்ந்துவிட்டது. வேலை வாய்ப்பு குறைந்து, செலவு அதிகரித்து விட்டது. நீலகிரியில் ஆன்லைன் பாஸ் முறை வந்துள்ளது.

வந்து பாருங்கள்!

திமுக நீதிமன்றத்தில் சரியாக வாதாடாத காரணத்தினால் இப்படிப்பட்ட நிலை வந்திருக்கிறது. குறிப்பிட்ட அளவு வாகனம் தான் நீலகிரி செல்ல வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீசனில்தான் அவர்களுக்குப் பிழைப்பு நடக்கும். திமுக அரசு சரியான நடவடிக்கை எடுக்காததால் இன்றைக்கு 6 ஆயிரம் வாகனத்துக்கு மேல் வர முடியாது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நீதிமன்றத்தில் மக்களின் பிரச்னையை எடுத்துச்சொல்லி இதற்கு ஒரு தீர்வு காணப்படும். குன்னூர், கூடலூர், உதகை வியாபாரிகளுக்கு ஏற்பட்டிருக்கும் கடும் பாதிப்பிலிருந்து அவர்களை மீட்டெடுக்க அதிமுக அரசு துணை நிற்கும். திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை. போதைப் பொருள் இல்லாத இடமே கிடையாது. இதனால் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி சீரழிகிறார்கள். திமுக ஆட்சியில் எல்லா துறையிலும் ஊழல். திமுக எம்பி கனிமொழி பேசுகிறார். அதிமுக கட்சி அலுவலகம் டில்லியில், உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டில் இருக்கிறது என்று பேசுகிறார். அதிமுக அலுவலகம் சென்னையில்தான் இருக்கிறது. வந்து பாருங்கள்.

மறந்துவிடாதீர்கள்

அதிமுகவை உடைக்க, பிளக்க சதி செய்தீர்கள், எந்த விதத்திலும் அதிமுக செயல்படக்கூடாது என்பதற்காக நீதிமன்றத்தின் மூலமாக வெவ்வேறு விதத்தில் முயற்சி செய்தீர்கள், அத்தனையும் அதிமுக தொண்டர்களால் முறியடிக்கப்பட்டது. திமுகவுக்கு சோதனை வந்தபோது, கட்சி அலுவலகத்தை பிரிந்து சென்றவர்கள் கைப்பற்ற நினைத்தபோது, அதைக் காப்பாற்றிக் கொடுத்தது ஜெயலலிதா தான் என்பதை மறந்துவிடாதீர்கள். திமுக இரண்டாகப் போனது கருணாநிதி தடுமாறிக் கொண்டிருந்தார், அப்போது சிலர் அறிவாலயத்தை கைப்பற்ற நினைத்தபோது காப்பாற்றிக்கொடுத்தது அதிமுக.

இதுதான் பழக்கம்

எப்போதும் அதிமுகவுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்துதான் பழக்கம். ஆனால் திமுக மக்களுக்கும் உதவிசெய்தது கிடையாது, கூட்டணி கட்சிக்கும் உதவி செய்த வரலாறு கிடையாது. திமுகவினர் குன்னூர் நகராட்சியில் கடைகளுக்கு வாடகை உயர்த்தமாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்தனர். ஆனால் உயர்த்திவிட்டனர். இதை எதிர்த்து அதிமுக சார்பில் போராட்டம் நடத்தினோம். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் வியாபாரிகளை அழைத்து தீர்வு காணப்படும். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

ManiMurugan Murugan
செப் 23, 2025 22:47

அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல் கட்சி தி மு கா கூட்டணி குடும்பப் பிரச்சனை க்கு டெல்லி செல்வதற்கு என்ன பெயர் .அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழலf கட்சி தி மு கா கூட்டணி வீடு என்று சொல்லலாமா


M Ramachandran
செப் 23, 2025 20:57

பழனி அன்னே காது குத்தாதீங்க. நீங் சொல்ல வரு வதென்ன நாங் இருவரும் பணக்காளிங்க நீஙக தான் எங்க குறிக்கோள்.எண்ணெய் கொடை கேசுலிருந்து அவஙகளையய நாங்கள் உஙக தலையில் உட்கார்ந்த அவர் கேசுளை கிடப்பில்போட்டு விடுவோம் என்கிறீர்களா? அப்போது மக்களின் தலை தான் உங்க்ளுக்கு மிளகாய் அரைக்க.


M Ramachandran
செப் 23, 2025 20:24

இது என்ன புது ரீலு. அது தான் பழனி அண்ணனுக்கும் தம்பி ஸ் டாலினுக்கும் ஏதோ அடிப்படை டீலிங் நடவடிக்கையயை இருக்குனு சொல்வதன் காரணம் வெளி வந்து கொண்டிருக்கு. நான் உன்னைய்ய கவனிதிக்கிறேனான் நீ என்னை கவனிச்சுக்கோ. ஊழல் அது நம் பொது உடமை.மக்கள் தான் நாம் சுரண்ட வேண்டிய இலக்கு. அண்ணலும் உன் திறமிய எனக்கு வராது. நானும் விஞ்சனா முறையை பற்றி தெரிந்து கொள்கிரேன் பங்காளி.


Abdul Rahim
செப் 23, 2025 19:11

கொடநாடு கொலைகாரன் யாரால் இங்கே காப்பாற்றப்பட்டு இங்கே நிற்கிறாராம் பன்னீர் ஆட்களிடம் இருந்து அதிமுக தலைமை கழக கட்டிடத்தை காப்பாற்றித் தந்தது போலீஸ் பாதுகாப்போடு எடப்பாடியின் மண்டை உடையாம பார்த்து காப்பாற்றி கொடுத்தது உங்க பங்காளி திமுகதான் இப்போ தேர்தலுக்கு நாடகம் ஆடுறீங்க.


திகழ்ஓவியன்
செப் 23, 2025 19:08

பாவம் இன்று சர்வம் தமிழ்நாட்டில் DMK இன்றி நடக்காது என்று ஆகிவிட்டது


ramesh
செப் 23, 2025 17:31

என்ன பல் இளிச்ச பழனிச்சாமி அவர்களே புது புதுசா கதை விடுகிறீர்கள் . பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்க . பன்னீர்க்கும் உங்களுக்கும் நடந்தது தான் சாந்தி சிரித்தது .மோடி உதவியால் கட்சியை கை பற்றி விட்டீர்கள் . இல்லை என்றால் தாங்கள் அதோ கதி தான்


Santhakumar Srinivasalu
செப் 23, 2025 17:16

அறிவாலயத்தை ஜெ காப்பாற்றியதாக இபிஎஸ் புது கரடி உடுரார்!


sankaranarayanan
செப் 23, 2025 17:02

திமுக இரண்டாகப் போனது கருணாநிதி தடுமாறிக் கொண்டிருந்தார், அப்போது சிலர் அறிவாலயத்தை கைப்பற்ற நினைத்தபோது காப்பாற்றிக்கொடுத்தது அதிமுக. பஞ்சமி நிலத்தை பிரிப்பதில் என்ன உதவி யார் சொத்தையோ யாரோ அனுபவிக்க இவர்கள் உதவினார்களாம் சற்றே இன்னம் விவிரமாக எப்படிப்பட்ட உதவி எந்த மாதிரி உதவி என்று விளக்கமாக சொன்னால் இப்போது உள்ள இளைஞர்களுக்கு வெளிச்சம் போட்டர்போல நன்றாகவே தெரியும் அவர்களின் ஆட்டம் குறையும்


V K
செப் 23, 2025 15:56

அப்போ திமுக வுடன் ரகசிய தொடர்பில் இருக்கிறார் பழனி உண்மையை சொல்லிவிட்டார்


bharathi
செப் 23, 2025 15:55

We know you both are same and never allow TN to grow...keep the people in dark


முக்கிய வீடியோ