உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எலுமிச்சம் பழத்தால் விழுந்து நொறுங்கிய ஜீப்: வாங்கிய முதல் நாளிலேயே நிகழ்ந்த சோகம்

எலுமிச்சம் பழத்தால் விழுந்து நொறுங்கிய ஜீப்: வாங்கிய முதல் நாளிலேயே நிகழ்ந்த சோகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் புதிய ஜீப் வாங்கி, டயரில் எலுமிச்சம் பழம் வைத்து பூஜை செய்து இயக்கிய போது, அதிவேகமாக சீறிய ஜீப், கண்ணாடி தடுப்பை உடைத்துக் கொண்டு முதல் தளத்தில் இருந்து விழுந்து நொறுங்கியது. உத்தர பிரதேசத்தின் காஜியாபாதை சேர்ந்தவர் மாணி பவார், 29. இவர், தன் கணவருடன் காஜியாபாத் எல்லையை ஒட்டி அமைந்துள்ள டில்லி ப்ரீத் விஹார் பகுதியில் உள்ள, 'மஹிந்திரா' கார் விற்பனையகத்துக்கு சமீபத்தில் சென்றார்; பலவிதமான கார்களை பார்வையிட்ட பின், 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 'தார் ராக்ஸ்' ஜீப்பை வாங்கினார். அந்த விற்பனை நிலையம், கட்டடத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ளது. ஜீப்பை 'டெலிவரி' எடுக்கச் சென்ற மாணி பவார், பூஜை போட்டு, டயர்களுக்கு அடியில் எலுமிச்சம் பழங்களை வைத்து, அவற்றின் மீது ஏற்றி ஜீப்பை இயக்க முயன்றார். எலுமிச்சம் பழங்கள் நசுங்க வேண்டும் என்பதற்காக, அவர் ஆக்சிலேட்டருக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்து இயக்கியதாக கூறப்படுகிறது. இதனால், சீறிப்பாய்ந்த ஜீப், முதல் தளத்தின் கண்ணாடி சுவரை உடைத்துக் கொண்டு தரை தளத்தில் விழுந்தது. மஹிந்திரா விற்பனையகத்தின் எதிரே இருந்த கட்டடத்தின் கார் நிறுத்தும் இடத்தில் தலைகீழாக விழுந்த புத்தம் புதிய கார் நொறுங்கியது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன. ஜீப்பில் இருந்த 'ஏர் பேக்' திறந்து கொண்டதால், அதில் பயணித்த மாணி பவார், அவர் கணவர் மற்றும் மஹிந்திரா நிறுவன ஊழியர் விகாஸ் ஆகிய மூ வரும் காயங்களுடன் தப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Chandhra Mouleeswaran MK
செப் 11, 2025 22:13

மஹீந்திரா, மாடித் தளத்தில் ஜீப்களை வைத்து ஷோ செய்வது மாங்கா மடத்தனம் அங்கேயே அதை ஓட்டிப் பார்க்க அனுமதித்தது அதைவிட மாங்கா மடத்தனம் கம்பெனியின் டெஸ்ட் ட்ரைவர் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாரா? கற்றுக் குட்டி டிரைவர் சார்? வாங்கிய பெண், அதைக்கூடக் கவனிக்காமல் வண்டியில் ஏறி ஓட்டிப் பார்த்தது அதைவிடப் பெரிய மாங்கா மடத்தனம் அநேகமாக ரீல்ஸ் எடுக்கும் வெறியாக இருக்கும் கூட இருந்த யாருமே உண்மையாகவே வண்டி மாடித் தளத்தில் இருப்பதைக் கவனிக்கவே இல்லையா? அட ராகவேந்திரா இதை நம்பினால் அது மகாப் பெரிய மாங்கா மடத்தனம் தம்புடு தலைப்பை ஆராய்ச்சி ஏழாய்ச்சி எல்லாம் செய் கண்டு பிடித்த உனக்கு எலுமிச்சம் பழத்தின் மீது அப்படி என்னம்மா ஒரு கடுப்பு?? "எலுமிச்சம் பழம் நசுங்க வேண்டும் என்பதற்காக அதிக ஆக்ஸிலேட்டர் கொடுத்திருப்பார்" என்று, தலைப்பிற்கு ஊறுகாயாக ஒரு விளக்கம் வேறு


john
செப் 11, 2025 14:32

இது ஒரு விபத்து, திறமைசாலிக்கும் விபத்து ஏற்படும், புதிய வண்டி வாங்கும்பொழுது, முன்னதாக வேறஒருவண்டியில் சோதனை ஓட்டம் செய்யவேண்டும் அப்பொழுதுதுதான் வண்டியில் உள்ள அனைத்து பயன்பாடுகளும் தெரிந்து கொள்ளமுடியும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 11, 2025 13:45

விவேக் காமெடிதான் நினைவுக்கு வருது .....


DEENATHAYALU
செப் 11, 2025 12:31

என்ன சொல்லுவது


Ramesh Trichy
செப் 11, 2025 10:59

When delivering a vehicle, the process should always be carried out from the ground floor. The showroom management should have anticipated and analyzed all potential risks involved in operating or starting vehicles from the first floor, and taken appropriate preventive actions before this incident occurred. This reflects a lack of awareness regarding essential safety precautions. Secondly, all delivery formalities and rituals should have been conducted on the ground floor. At the very least, the showroom staff should have clearly explained and d awareness for the new owner regarding how to properly start, operate, and navigate the vehicle. It is important to first understand the vehicle's behavior before attempting to start or drive it. Even trained drivers may encounter such issues if these precautions are not followed.


பெரிய குத்தூசி
செப் 11, 2025 10:04

மஹிந்திரா கார்கள் எப்போதும் பாதுகாப்பு தரத்தில் குறைவில்லை என்பதை இந்த விபத்து நிரூபித்துள்ளது. காரை வாங்கியவர் கண்டிப்பாக கார் இன்சூரன்ஸ் எடுத்திருப்பார். காருக்கு உண்டான டேமேஜ் மற்றும் மற்ற கிளைம்ஸ் களை இன்சூரன்ஸ் மூலம் சரிசெய்துவிடலாம். புதிய காரை டெலிவரி எடுக்கும் ஆர்வத்தில் மஹிந்திரா தார் ராக்ஸ் இயக்கத்தை தவறுதலாக இயக்கி கார் சீறி உள்ளது. மனித உயிர் பலி இல்லாதது நல்ல செய்தி, கடவுளுக்கு நன்றி. எலும்பிச்சை டையர் அடியில் வைக்கும் செயல் அறிவியல் பூர்வமானது. புத்திசாலிபோல் எலும்பிச்சை பழத்திற்கு எதிர்மறை கமெண்ட் கொடுப்பவர்கள் கொஞ்சம் நேரம் செலவு செய்து எலும்பிச்சை பழ திஷ்தி பறிக்கார அரசியல் பூர்வ விஷயங்களை தெரிந்து கொள்ள முயலுங்கள்.


shyamnats
செப் 11, 2025 08:47

வண்டி ஓடட தெரியலேன்னா எலுமிச்சம்பழம் என்ன பண்ணும்? வண்டி ஓட்ட தெரியாத இவர் தரையில் வாகனத்தை செலுத்தியிருந்தால் பொதுமக்கள் பலருக்கும் மோட்ச வாய்ப்பு கிடைத்திருக்கலாம். நல்ல வேளையாக எலுமிச்சம்பழம் அனைவரையும் காப்பாற்றியது. license வழங்கும் போது, லஞ்ச லாவண்ய சபலங்களுக்கு அடிபணியாமல் , அப்பாவி பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, மேலும் கடமை உணர்வோடு வழங்க வேண்டும்.


Thiagaraja boopathi.s
செப் 11, 2025 08:32

தவறான கருத்து


Chitra Rengarajan
செப் 11, 2025 08:28

மண்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள்


VENKATASUBRAMANIAN
செப் 11, 2025 08:01

இதென்ன தலைப்பு. அவருக்கு ஓட்ட தெரியவில்லை. அதற்கும் எலும்பிச்சை பழம் காரணமா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை