உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  காங்., ராகுல் பக்கம் திரும்பியது ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்

 காங்., ராகுல் பக்கம் திரும்பியது ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை, காங்., வாபஸ் பெற வேண்டும் என, அக்கட்சியின் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுலுக்கு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் அமைப்பினர் வலியுறுத்திஉள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய மூன்று தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதைக் கண்டித்தும், மூன்று போட்டித் தேர்வுகளை ரத்து செய்யக் கோரியும், மாணவர்கள், இளைஞர்கள் இணைந்து, 20 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, சி.பி.ஐ., அல்லது ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய குழு மூலம், சுதந்திரமான முறையில் விசா ரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், முதல்வர் ஹேமந்த் சோரன் தங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காவிட்டால், அவரது அரசுக்கு அளித்து வரும் ஆதரவை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் வாபஸ் பெற வேண்டும் என, மாணவர்கள் அமைப்புகள் தற்போது வலியுறுத்தியுள்ளன. மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு வினாத்தாள் முன்னதாக கசிந்த விவகாரத்தில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் டில்லியில் நடத்திய போராட்டத்துக்கு ஆதரவு அளித்ததுபோல், தங்களுடைய போராட்டத்துக்கும் ராகுல் ஆதரவு அளிக்க வேண்டும் என, மாணவர்கள் அமைப்புகளின் தலைவர்கள் கூறியுள்ளனர்.

உருவ பொம்மைகளை எரித்து மாணவர்கள் போராட்டம்

ஜார்க்கண்ட் மாநிலம் முழுதும், அரசு பணி நியமன தேர்வு முறைகேடுகளை கண்டித்து மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் காங்கிரஸ் எம்.பி., ராகுலின் உருவ பொம்மையை எரித்து, தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணி அரசு தங்களது கோரிக்கையை நிறைவேற்ற உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Vijayakumar Srinivasan
ஆக 19, 2026 18:50

இதுகாங்கஸின்இரட்டை நிலைபாட்டைஎடுக்கிறது


சிவா. தொதநாடு.
ஆக 17, 2026 22:21

ஏம்பா ஜார்கண்டு கார பூராவுமே தமிழ்நாட்டுல இருக்கா அப்புறம் அங்கு எப்படி


Chandhra Mouleeswaran MK
ஆக 17, 2026 16:20

ஏம்ப்பா? பா - ஆ - ஆ - ஆ - வம்லெ இந்தப் பப்பு? அவம்பாட்டுக்கு இத்தாலில பட்டம் வுட்டுக்கிட்டு, ஜிங்கிடிகளத் தொரத்திக்கிட்டு, அவிய்ங்க கூட ஏரோப்ளேன் பாண்டி வெளையாண்டிட்டு நவரத்தினமா இருக்கரதால ரொம்ப நல்ல கெராக்கியோட இருந்தான் அவனப் புடுச்சு இந்த இத்தாலிக்காரி அரசியலில அதுவும் நம்ம பாரத நாட்டு அரசியலில் இசுத்து வுட்டுட்டு அக்குரும்பு பண்ணி உட்டுட்டா கரப்பாம்பூச்சி மாதிரி கையக் காலப் பரப்பிட்டு டெல்லி வீதில பொரண்டு வெளம்பரம் தேடிட்டது எல்லாம் வீணாப் போயிரும்போல உப்ப இவுனுக முட்டுக் குடுத்துத் தூக்கி நிறுத்தி இரக்கர ஜார்க்கண்டெ இவன இசுக்குது அங்கிட்டுப் போயிக் கராப்பான் பூச்சி வேசம்லாம் போட முடியாதில்ல?


என்றும் இந்தியன்
ஆக 17, 2026 16:07

ராகுல் உடனே காங்கிரஸிலிருந்து நீக்கப்படவேண்டும்???அவரால் தான் பிஜேபி ஆட்சி கொடிகட்டிப்பறக்கின்றது. அவர் தான் பிஜேபி கட்சியின் உயர்வுக்குக்காரணம்.


Anand
ஆக 17, 2026 12:47

தனக்கு தானே ஆப்படித்துக்கொண்டிருக்கிறார்.


Venkatesan
ஆக 17, 2026 12:41

உண்மையான போராட்டத்துக்கு எல்லாம் ஆதரவு கிடையாது பாஸ். மோடியை திட்டுறீங்களா அப்போ ஒகே மத்தபடி நேர்மை நியாயம் தர்மம் இதுக்கெல்லாம் வேற இடம் பாருங்க... கரப்பானப்பூச்சிகளின் தலைவன் அபிஜித் அமைதியாக இதை வேடிக்கை பார்த்து ரசிப்பார்... இந்த போராட்ட்டம் வெற்றி அடைகிறாற்போல இருந்தால் ஒரு சீன போட்டு என்னால தான் எல்லாம்னு சொல்லுவார்.அப்படியே ஆம் ஆத்மி கட்சியின் பிலே புக்


Mohan
ஆக 17, 2026 10:03

இப்டி அங்கொன்னும் இங்கொன்னுமா இவுங்க ஆட்சி பண்றது நல்லதுதான் அப்போதான் இப்டி செக் முடியும் ..ஆனா ஒரு லெவெலுக்கு மேல காங்கிரெஸ்ஸா விற்ற கூடாது ....ஒரு 3 மாநிலம் காங்கிரஸ், 2 INDI கூட்டணி போதும் அப்பறோம் பாரதம் பூராவும் BJP ஆளனும் ..எல்லை மாநிலங்கள் குறிப்ப இவுனுக கிட்ட விடக்கூடாது . அப்பறோம் மேற்குவங்கம் நிலைமைதான்


M Ramachandran
ஆக 17, 2026 09:49

கரப்பாண்பூச்சிய என்ற விஷ கிருமி ராகுலு நீர் வார்த்து வளர்க்க எண்ணினார். அது இப்போ தன்னை நோக்கி ஆள் காட்டி விரல்லை உயர்த்துகிறது. ராகுல் குட்டிகள் இப்போ தாய் உடன் சேர்ந்து மிரண்டு பார்க்குது.ஆம் ஆத்தமியை நம்பி யார் இறங்கினாலும் நேரம் பார்த்து அம்போனு விட்டு விட்டு விலகி விடும். காலை வருவதில் ராகுலுக்கு பாடம் எடுப்பார்கள்.


duruvasar
ஆக 17, 2026 09:42

மோடியை தனிப்பட்டமுறையில் கேவல படுத்தும் வக்கரத்தை தவிர சல்லி காசுக்கு வொர்த்தான மூளை இல்லாத பிறவி. . இந்த ஆளுகிட்ட பேசுவதைவிட கருக்கலில் போய் முட்டிக்கொள்ளலாம் என்பதை இவர்கள் புரிந்துகொண்டிருந்தால் இந்த மாதிரி கோரிக்கைகளை வைக்கமாட்டார்கள்.


jss
ஆக 17, 2026 09:37

காங்கிரஸும் ஒழிய வேண்டும் என்று வேண்டுகோள் வையுங்கள். ராகுல் உங்களை கண்டு கொள்ள மாட்டார். காங்கரஸ கட்சிக்கு பணம் ஜார்கண்ட அமைச்சர்கள் மூலம் ஊழலில் வரலாம். அதனால் அவர்கள் வாய் மூடி மௌனியாகவே இருப்பார்கள்.


புதிய வீடியோ