உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் 2 வீரர்கள் மாயம்: தேடும் பணியில் ராணுவம் மும்முரம்

காஷ்மீரில் 2 வீரர்கள் மாயம்: தேடும் பணியில் ராணுவம் மும்முரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜம்மு: காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இரண்டு ராணுவ வீரர்கள் மாயமாகினர். அவர்களை கண்டுபிடிக்கும் பணியில் ராணுவம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.ஜம்மு காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தின் கடூல் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் நேற்று ராணுவம் ஈடுபட்டது. அங்கு பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் தேடும் பணி நடந்தது. இதன் பிறகு வீரர்கள் முகாம் திரும்பிய நிலையில் இரண்டு பேர் மட்டும் திரும்பவில்லை.அந்த பகுதியில் கனமழை பெய்ததால், வானிலை மோசமாக நிலவுகிறது. இதனால், அந்த வீரர்களை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து ராணுவத்தினரும், போலீசாரும் இணைந்து அந்த வீரர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வனப்பகுதியில் கடந்த காலங்களில் பயங்கரவாதிகளுடன் பல முறை துப்பாக்கிச்சண்டை நடந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி