உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துருக்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் சஸ்பெண்ட்: ஜேஎன்யு.,வை தொடர்ந்து ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலையும் அறிவிப்பு

துருக்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் சஸ்பெண்ட்: ஜேஎன்யு.,வை தொடர்ந்து ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலையும் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையை தொடர்ந்து, துருக்கியுடன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலையும் நிறுத்தி வைத்துள்ளது.இந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதலில் பிற நாடுகள் அமைதி காத்தன. ஆனால், துருக்கி மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது. இது இந்தியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. இதனால், அந்நாட்டிற்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் அதனை ரத்து செய் வருகின்றனர்.இதனை தொடர்ந்து கல்வி நிறுவனங்களும் துருக்கிக்கு எதிராக திரும்பி உள்ளன. துருக்கி பல்கலை உடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக ஜவஹர்லால் நேரு பல்கலை அறிவித்தது.தற்போது டில்லியில் உள்ள ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலையும் துருக்கி உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.இது தொடர்பாக அப்பல்கலை பேராசிரியர் சைமா சயீத் கூறியதாவது: துருக்கி உடன் தொடர்புடைய அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைத்துள்ளோம். நாட்டு மக்கள் மற்றும் இந்திய அரசுக்கு ஆதரவாக நிற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Barakat Ali
மே 16, 2025 09:26

ஜே என் யு மத்திய அரசின் அல்லது யு ஜி சி யின் ஒப்புதலுடன்தான் ஏற்கனவே ஒப்பந்தத்தை மேற்கொண்டதா ????


நிக்கோல்தாம்சன்
மே 16, 2025 07:12

நிரந்தர ரத்து செய்ய முடியவில்லையா சயீத் அவர்களே , மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் தீவிரவாதிகளை ஆதரிக்கும் போக்கை மறக்க வேண்டும்


Kasimani Baskaran
மே 16, 2025 03:59

நிரந்தரமாக இரத்து செய்ய வேண்டும். அமேரிக்காவும் கூட இப்பொழுது பல பில்லியன்களில் துருக்கிக்கு ஆயுதம் கொடுக்கிறது, தீவிரவாதிகளுடன் கும்மியடிக்கிறது.. அமெரிக்காவையும் புறக்கணிக்கும் காலம் விரைவில் வரும்.


Vasan
மே 16, 2025 02:28

Instead of showing enmity towards Turkey, India should befriend Turkey and make them realise to stop supporting Pakistans military that has failed to curb terrorism.


Kalyanaraman
மே 16, 2025 08:36

வாசன் வீட்டில் யாராவது பஹல்காம் தாக்குதலில் இறந்திருந்தால் இப்படி கமெண்ட் போடுவாரா?? தூங்குபவனை எழுப்பலாம் தூங்குற மாதிரி நடிக்கிறவனை எழுப்ப முடியுமா? - அதுதான் துபொறுக்கி.