உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் போலீசாரை தாக்கிய ஜேஎன்யூ பல்கலை மாணவர்கள் கைது

டில்லியில் போலீசாரை தாக்கிய ஜேஎன்யூ பல்கலை மாணவர்கள் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் போராட்டம் நடத்துவதை தடுக்க முயற்சித்த போலீசாரை ஜேஎன்யூ பல்கலை மாணவர்கள் தாக்கினர். இதையடுத்து மாணவர் சங்கத் தலைவர் உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டனர். டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இன்று மாலை மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நெல்சன் மண்டேலா சாலையை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற அவர்களை, போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி பேரணி செல்ல மாணவர்கள் முயன்றனர். இதனால், போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாணவர்கள் சிலர் போலீசாரை சரமாரியாக தாக்கினர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதில், 6 போலீசார் காயமடைந்தனர்.பின்னர், மாணவர் சங்கத் தலைவர் நிதேஷ் குமார், துணை தலைவர் மணிஷா உள்பட 28 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் செயலைக் கண்டித்து ஜேஎன்யூ மாணவர்கள் இரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்த மாதம் ஜேஎன்யூ மாணவர் சங்கத் தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.பல்கலை வளாகத்தில் வலதுசாரி ஆதரவு ஏபிவிபி சங்கத்தை சேர்ந்த மாணவர்களுக்கும், இடதுசாரி சங்கங்களை சேர்ந்த மாணவர்களுக்கும் தசரா பண்டிகை முதல் மோதல் நீடித்து வருகிறது.இதில் போலீசார் ஏபிவிபி மாணவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி, இடதுசாரி அமைப்புகளின் ஆதரவு பெற்ற மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.போலீஸ் ஸ்டேஷனை நோக்கி ஊர்வலமாக செல்ல முயற்சித்த அவர்களை போலீசார் தடுத்தபோதுதான் இந்த மோதல் சம்பவம் நடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

V Venkatachalam
அக் 19, 2025 20:04

ஜெ என் யு மீன்ஸ் ஜவஹர் நக்ஸல் யுனிவர்சிட்டி. ஆர்டிக்கிள் 370 ஐ ஒழித்து கட்டியது போல இந்த யனிவர்ஸிடியும் ஒழித்து கட்டப்பட வேண்டிய ஒன்று.


naranam
அக் 19, 2025 14:51

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளால் ஆதரிக்கப்படும் இந்த மாதிரி குற்றவாளிகளை என்கவுண்டர் செய்து விடுவதே நாட்டுக்கு நல்லது.


Venkatesan Srinivasan
அக் 19, 2025 13:48

அர்பன் நக்சலைட்டுகள் உருவாகும் எந்த நிறுவனமும் ஒழிக்கப்பட வேண்டும். அது பல்கலைக்கழகம் ஆனாலும். ஜேஎன்யு இந்த விவகாரத்தில் அடிக்கடி செய்திகளில் அடிபடுகிறது. நாட்டின் தலைநகரில் இப்படி ஒரு நிறுவனம் இயக்கம் இருக்கலாகாது.


Rathna
அக் 19, 2025 12:14

சாதி பெயரில் அரசாங்க நிதி உதவியை வாங்கி கொண்டு, படிக்காமல் 50 வயது வரை அங்கே காலத்தை கடத்துபவன் பெயர் மாணவன். மிக மோசமான அர்பன் நக்ஸல்கள் உள்ள பல்கலை.


Barakat Ali
அக் 19, 2025 09:22

காரணம் ரொம்ப சிம்பிள் ...... தேசவிரோதிகள் அமித் ஷாவுக்கு அஞ்சுவதில்லை .....


நிக்கோல்தாம்சன்
அக் 19, 2025 07:32

பின்னால் விரலை காட்டுபவருக்கு எப்படியும் 34 வயதிருக்கும் இன்னமம் மாணவரா அவர்?


Kasimani Baskaran
அக் 19, 2025 07:16

ரவுடிகள்... ஒரு சில முன்னாள் மாணவர்கள் ஆக்கபூர்வமாக செயல்பட்டு உயர் பதவியில் இருக்கிறார்கள் என்றாலும் கம்முனிச கோட்பாடு மீது ஈடுபாடு உள்ளவர்கள்தான் இங்கு பெரும்பாலும் உற்பத்தி செய்யப்படுகிறார்கள்.


chennai sivakumar
அக் 19, 2025 06:25

உள்ள தள்ளி நுங்கு எடுத்து எச்சரிக்க வேண்டும். அடுத்த முறை டிஸ்மிஸ் செய்தால மட்டுமே உருப்படும்.


Iniyan
அக் 19, 2025 04:11

நக்ஸலைட்டுகள் இங்கிருந்துதான் உருவாக்க படுகிறார்கள். இந்த அர்பன் நக்ஸல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்


Thravisham
அக் 19, 2025 02:38

கேடு கெட்ட பிரிவினைவாதிகள் தேசத்துரோகிகளின் கூடாரமாக டில்லி JNU மாறி பல மாமாங்கமாகி விட்டது. இவர்களுக்கு உதவவே கபில் சிபல் போன்ற அர்பன் நக்ஸல்கள் காத்து கிடக்கிறார்கள். பிடிபட்ட மாணவர் போர்வையிலிருக்கும் பிரிவினை வாதிகளை பிதுக்கி எடுங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை