மேலும் செய்திகள்
நகராட்சி கமிஷனர் இடமாற்றம்
24-May-2025
புதுடில்லி:டில்லி கலவர வழக்கை விசாரிக்க, டில்லியிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி, மீண்டும் வருகிறார். சமீர் பாஜ்பாய் என்ற கூடுதல் செஷன்ஸ் நீதிபதி, டில்லியில் 2020ம் ஆண்டில் நடைபெற்ற கலவர வழக்கை விசாரித்து வந்தார். அவர், மே 30ம் தேதி, டில்லியில் உள்ள ஷதாரா விரைவு நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அந்த பணியிடத்தில் தொடர்ந்து அவர் பணியாற்றி வருகிறார்.அவர் ஏற்கனவே பார்த்து வந்த பணியிடத்திற்கு, லலித் குமார் என்ற நீதிபதி நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அந்த வழக்கின் பெரும்பாலான விசாரணையை சமீர் பாஜ்பாய் கவனித்தார்; வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில், அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.இதையடுத்து, சமீர் பாஜ்பாயே மீண்டும் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என, லலித்குமார் கேட்டுக் கொண்டார். அதையடுத்து, அந்த பணியிடத்திற்கு மீண்டும் வரவுள்ள அந்த நீதிபதி, வரும் ஜூலை 1 முதல், தொடர்ந்து விசாரிக்க உள்ளார்.டில்லியில், 2020ல் நடந்த கலவர வழக்கில், 53 பேர் கொல்லப்பட்டனர்; 700 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த வழக்கில், 17 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சிகள் விசாரணையும் முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
24-May-2025