உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரபல நடிகைக்கு பயங்கரவாதிகள் கொலை மிரட்டல்...! ரிலீசான பகீர் வீடியோ

பிரபல நடிகைக்கு பயங்கரவாதிகள் கொலை மிரட்டல்...! ரிலீசான பகீர் வீடியோ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை; பிரபல நடிகையும், பா.ஜ., எம்.பி.யுமான கங்கனா ரனாவத்துக்கு கொலை மிரட்டல் விடும் வகையில் பயங்கரவாதிகள் வீடியோ ரிலீஸ் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சர்ச்சை கருத்துகள்

பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் மண்டி தொகுதி பா.ஜ., எம்.பி.யாக இருக்கிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் அவருக்கு தற்போது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.

எமர்ஜென்சி

தான் தயாரித்து இயக்கி உள்ள எமர்ஜென்சி என்ற படமே இதற்கு காரணம். படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி கால சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு உள்ளது. வரும் 6ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் இப்படத்துக்கு ரித்தேஷ் ஷா திரைக்கதை,வசனம் எழுத, ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

வீடியோ

இந்நிலையில் படம் ரிலீசாகும் நாள் நெருங்கும் சூழலில் கங்கனாவுக்கு மிரட்டல் விடுத்து சிலர் பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை கூட்டி இருக்கிறது. அதில் அவர்கள் கூறி உள்ளதாவது;

கைவிரல்கள்

வரலாற்றை மாற்றவே முடியாது. சீக்கியர்களை தீவிரவாதிகளாக சித்திரித்து காட்டினால் நீங்கள் (கங்கனா ரனாவத்) யாரை பற்றி படம் எடுக்கிறீர்களோ அவருக்கு என்ன நடந்தது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எங்களை நோக்கி நீட்டப்படும் கைவிரல்களை எப்படி உடைப்பது என்று தெரியும்.

தியாகம்

ஏற்கனவே நீங்கள் அறை வாங்கி இருக்கிறீர்கள். எங்களின் தலைகளை தியாகம் செய்ய துணியும் எங்களுக்கு அதை எடுக்கவும் தெரியும் என்று மிரட்டலாக பேசி உள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இந்த வீடியோவை பலரும் தங்களின் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

கோரிக்கை

அதேநேரத்தில் கங்கனா ரனாவத்தும் இதே வீடியோவை தமது எக்ஸ் வலை தளத்தில் பகிர்ந்துள்ளார். ஹிமாச்சல பிரதேச காவல்துறை, மகாராஷ்டிரா டி.ஜி.பி., பஞ்சாப் காவல்துறையை அவர் டேக் செய்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஆரூர் ரங்
ஆக 27, 2024 15:30

மண்டி புரோக்கர் கூலிப்படை கும்பலை விவசாயிகள் ன்னு குறிப்பிட்ட குற்றத்துக்கு கடும் தண்டனை தர வேண்டும்.


MADHAVAN
ஆக 27, 2024 11:41

மக்களிடம் கேட்டால் தெரியும்,


பாமரன்
ஆக 27, 2024 10:54

அலோ பெரிய ஜி அன் சின்ன ஜி... இந்த பீஸை தமிழ்நாட்டு ரசியலுக்கு அனுப்பி வைங்க... பாவம் இங்கே ஆடுசார் தனியா காமெடி செய்ய கஷ்டப்படுறாப்ல... எங்களுக்கும் பண்டிகைக்கால பொழுதுபோக்கு கிடைக்கும்ல...


N Sasikumar Yadhav
ஆக 27, 2024 12:45

படித்தவர்கள் பின் செல்லாமல் குடித்தவர்கள் பின் செல்லுங்க உங்களுக்கும் உங்க சந்ததியினருக்கும் பண்டிகைக்கால காமெடி கிடைக்கும் இதற்கு உங்க திராவிட மாடல் உத்தரவாதம் கொடுக்கும்


Duruvesan
ஆக 27, 2024 13:12

அமைதி மொத்தம் சொந்த பேர் இல்லாமல் திரிவது ஏன்


Kumar Kumzi
ஆக 27, 2024 14:42

நீ என்ன தான் முட்டு கொடுத்தாலும் போஸ்டர் ஓட்ட தான் லாயக்கு


ஆரூர் ரங்
ஆக 27, 2024 10:54

தேசீயக்கொடி இருக்குமிடத்தில் காலிஸ்தான் கொடியை ஏற்றியவர்கள் விவசாயிகளல்ல . அந்நியக் கைக்கூலிகள். இட்டலி குடும்பம் வேறெதையும் ஆதரிக்காது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை