உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., எழுதியதை படிச்சதுதான் கங்கனா... பாய்கிறார் அகிலேஷ்

பா.ஜ., எழுதியதை படிச்சதுதான் கங்கனா... பாய்கிறார் அகிலேஷ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ; விவசாயிகள் போராட்டத்தை விமர்சித்த கங்கனாவின் கருத்துகள் பா.ஜ.,வின் ஸ்கிரிப்ட் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

வேளாண் சட்டங்கள்

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து புதுடில்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தை யாரும் மறந்திருக்க முடியாது. பெரும் தலைவலியாக மாறிய இந்த போராட்டத்தை அடுத்து, வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. என்றோ முடிந்த இந்த போராட்டம், அப்போது நடந்த சம்பவங்கள் குறித்து பா.ஜ., எம்.பி., கங்கனா ரனாவத் அண்மையில் ஒரு கருத்தை வெளியிட்டு இருந்தார்.

மிரட்டல்

வங்கதேச வன்முறையோடு விவசாயிகள் போராட்டத்தை ஒப்பிட்டு அவர் பேச, பெரும் சர்ச்சையானது. எதிர்க்கட்சிகள் அவரது கருத்தை கண்டித்து பதிலடி தர, சிலர் அவரது தலையை கொய்துவிடுவோம் என்று பயங்கர மிரட்டலும் விடுத்தனர்.

ஸ்கிரிப்ட்

இந்நிலையில் கங்கனாவின் பேச்சு, பா.ஜ., எழுதியது, அவர்கள் எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்ட்டையே பேசி இருக்கிறார் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது;

சாணக்கியவாதி

கங்கனாவுக்கு பா.ஜ., எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்ட். அதைத் தான் வசனங்களுடன் அவர் வாசித்து இருக்கிறார். விவசாயிகளை பற்றியும், அவர்களது போராட்டங்களை பற்றியும் வன்மமாக பேசுவது தவறு என்பது ஒரு சாதாரண அரசியல்வாதிக்கே தெரியும். இது பா.ஜ., சாணக்கியவாதிகளுக்கு தெரியாதா?

தோல்வி

இவர்களின் இந்த நாடகத்தின் அத்தியாயமே, வேண்டும் என்றே நடத்தப்பட்டது. ஹரியானா தேர்தலில் பா.ஜ.,வுக்கு வெற்றி கிடைக்காது. அந்த தோல்வியை கங்கனா பேச்சின் மூலம் மறைக்கவே இதுபோன்று ஒரு விஷயத்தை கூறுமாறு சொல்லி இருக்க வேண்டும். கட்சி தலைமையில் உள்ளவர்களை பாதுகாக்க இந்த விஷயத்தை அவர்கள் ஒரு கேடயமாக பயன்படுத்துவார்கள் என்று அகிலேஷ் யாதவ் கூறி உள்ளார்.

மறுப்பு

ஹரியானாவில் அக்டோபர் 1ம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் கங்கனாவின் கருத்துக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, அவரது கருத்துக்கு பா.ஜ., மறுப்பு தெரிவித்து இருந்தது, குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

பேசும் தமிழன்
ஆக 29, 2024 07:43

முதலில் உத்தரப்பிரதேச மக்கள் இவனை புறந்தள்ள வேண்டும் ....தேர்தலில் விரட்டி அடிக்க வேண்டும்.... நாட்டை எப்படி கொள்ளை அடிக்கலாம் என்று காத்து கொண்டு இருக்கிறார்கள் ஊழல் பேர்வழிகள்.


naranam
ஆக 28, 2024 16:02

கங்கனா சொன்னது முற்றிலும் உண்மை.


Nandakumar Naidu.
ஆக 28, 2024 09:28

இவன் ஒரு மாஃபியா கும்பலின் தலைவன். மிகவும் பயங்கரமான தேச,சமூக மற்றும் ஹிந்து விரோதிகளின் கூடாரம். கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் தோற்று விட்டால் வன்முறை வெடிக்கும் என்று ஊளையிட்டவன். அழிக்கப்பட வேண்டிய தீய சக்திகள்.


sankar
ஆக 28, 2024 08:49

கொள்ளைஅடிப்பதிலேயே குறியாய் இருக்கும் கூட்டம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை