உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற கர்நாடக தொழிலதிபருக்கு ஏற்பட்ட சோகம்; மனைவி கண்ணீர்

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற கர்நாடக தொழிலதிபருக்கு ஏற்பட்ட சோகம்; மனைவி கண்ணீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: கோடை விடுமுறையை கொண்டாட காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற கர்நாடக தொழிலதிபர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சோகம் அரங்கேறி உள்ளது.கர்நாடகாவின் ஷிவமோகா மாவட்டத்தை சேர்ந் மஞ்சுநாத் ராவ் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கோடை விடுமுறையை முன்னிட்டு அவர் மனைவி பல்லவி மற்றும் மகனுடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ளனர். பல இடங்களுக்கு சென்ற அவர்கள் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தனர். இன்ற பஹல்காம் பகுதிக்கு சுற்றுலா சென்ற போது மஞ்சுநாத் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தார்.இதுதொடர்பாக பல்லவி கூறியதாவது: நானும், மகனும் நலமுடன் உள்ளோம். எங்கள் கண் முன்னர் கணவர் இறந்துவிட்டார். பயங்கரவாதிகள் தூரத்தில் இருந்து சுட்டனர். நாங்கள் அருகே வருவதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார். நானும் எனது மகனும், எங்களை கொன்றுவிடும் படி பயங்கரவாதிகளை நோக்கி கத்தினோம். ஆனால் அவர்கள் சென்றுவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.பல்லவிக்கு , பா.ஜ., எம்.பி., தேஜஸ்வி சூர்யா ஆறுதல் கூறினார். தாக்குதல் சம்பவத்திற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கண்டனம் தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

RK
ஏப் 23, 2025 13:18

ஒழித்தால்தான் உலகம் அமைதியாக இருக்கும்.


shan
ஏப் 23, 2025 10:22

medical mafia மற்றும் தீவிரவாதம் இது இரண்டையும் ஒழித்து கட்டினால் ஒரு நாடு சொர்கமாகி விடும்.


N Annamalai
ஏப் 23, 2025 07:04

கொடுமை கண்டனங்கள் மீண்டும் உயிர் பெரும் தீவிரவாதம் நசுக்கப்பட்ட வேண்டும் .


தேச நேசன்
ஏப் 23, 2025 04:33

சித்தாராமையா கண்டனம் தெரிவிச்சு என்ன ஆகபோகுது. அவர்தான் கார்நாடகாவை இன்னோரு காஷ்மீரா மாத்துகிறார். மதரீதியான இட ஒதுக்கீடு அரசு ஓப்பந்தங்களிள்.


Kasimani Baskaran
ஏப் 23, 2025 03:56

இஸ்ரேல் போல பல்லாயிரம் பாக்கிகளை கொன்று குவித்தால் கூட தப்பில்லை.


முக்கிய வீடியோ