வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஸ்டெடியாக இல்லாத சைக்கிள்னு முட்டு கொடுத்துட்டு போய்க்கொண்டே இருப்பார்கள்...
பெங்களூரு; கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவகுமார் சைக்கிளில் இருந்து கீழே தவறி விழுந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. கர்நாடகா சட்டசபையில் உலக சுற்றுச்சூழல் நாள் தொடர்பான விழிப்புணர்வு நடைப்பயண நிகழ்வு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், அம்மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார், அமைச்சர் ஈஸ்வர் காண்ட்பிரே ஆகியோர் கொடி அசைத்து துவங்கி வைத்தனர். அதன் பின்னர், நடைப்பயணத்தை முடித்துவிட்டு பின்னர் சட்டசபை வளாகத்திற்கு டி.கே. சிவகுமார் சைக்கிளில் திரும்பினார். பின்னர் கீழே இருந்த படிக்கட்டை கவனிக்காமல் சென்றார். இதில் படிக்கட்டில் மோதிய சிவகுமார், எதிர்பாராத விதமாக கீழே சாய்ந்து விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரின் பாதுகாவலர்கள் உடனடியாக அங்கே ஓடி வந்தனர். பின்னர் கைத்தாங்கலாக டி.கே. சிவகுமாரை தூக்கிவிட்டனர். இதில் அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
ஸ்டெடியாக இல்லாத சைக்கிள்னு முட்டு கொடுத்துட்டு போய்க்கொண்டே இருப்பார்கள்...