உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஸ்ரீநகர் : காஷ்மீரில் நடந்த முழு அடைப்பு போராட்டத்தின் காரணமாக, அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. காஷ்மீர் மாநிலம், சோபூர் பகுதியைச் சேர்ந்த நசிம் ரசீத், 28, என்ற இளைஞரை, போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் இருந்த அந்த இளைஞர், கடந்த மாதம் 31ம் தேதி, மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக, மூன்று போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்; ஒரு போலீஸ் உயர் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இளைஞரின் மர்ம மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து, காஷ்மீரில் நேற்று முழு அடைப்பு போராட்டத்திற்கு ஹூரியத் மாநாட்டு கட்சித் தலைவர் சயித் அலி ஷா கிலானி அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து, காஷ்மீரில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

பள்ளிகள், கடைகள், வணிக வளாகங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வங்கிகள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டிருந்தன. அரசு மற்றும் தனியார் போக்குவரத்து முழுமையாக முடங்கியது. இதன் காரணமாக, காஷ்மீரில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ