உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யுனிசெப் இந்தியா அமைப்பின் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்

யுனிசெப் இந்தியா அமைப்பின் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: குழந்தைகள் உரிமைக்கான தூதராக நடிகை கீர்த்தி சுரேஷை 'யுனிசெப்' இந்தியா அமைப்பு நியமித்தது. ''யுனிசெப் இந்தியா அமைப்புடன் இணைந்து செயல்படுவதில் பெருமை அடைகிறேன்'' என கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.யுனிசெப் என்பது ஐநாவின் குழந்தைகள் நல நிதியம். உலகின் 190 நாடுகளில் இந்த அமைப்பு செ யல்படுகிறது. மனிதாபிமான உதவி மற்றும் சுகாதார, ஊட்டச்சத்து, கல்வி, பாதுகாப்பு போன்ற உரிமைகளை குழந்தைகளுக்கு வழங்கவும், வலியுறுத்தவும் இந்த அமைப்பு பாடுபடுகிறது. இதன் இந்திய பிரிவின் சார்பில், ஏற்கனவே சினிமா பிரபலங்கள் பலர் தூதர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். தற்போது, நடிகை கீர்த்தி சுரேஷ் தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார்.தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிக்கை க்கான தேசிய விருது பெற்றவர். இது குறித்து கீர்த்தி சுரேஷ் கூறுகையில், ''குழந்தைகள் தான் நமது மிகப்பெரிய எதிர்க்கால நம்பிக்கை, அவர்கள் மீது அன்பு செலுத்தி சிறந்தவர்களாக உருவாக்குவதற்கு தேவையான அடித்தளத்தை மேம்படுத்த வேண்டியது நமது கடமை. யுனிசெப் இந்தியா அமைப்புடன் இணைந்து செயல்படுவதில் பெருமை அடைகிறேன், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

renga rajan
நவ 17, 2025 07:57

ஐ நா. விலும்சினிகலாச்சாரம்


Sun
நவ 16, 2025 21:49

யுனிசெப் இந்தியா என்ற ஐ.நா.சபையின் குழந்தைகள் அமைப்பிற்கு செயல் படக் கூடிய அளவுக்கு இவருக்கு திறமை, அல்லது மனிதாபிமான முன் அனுபவம் ஏதேனும் உள்ளதா? இவர் போன்றவர்கள் எதை தகுதியாக வைத்து ஐ.நா வால் தேர்வு செய்யப் படுகிறார்கள்? இது போன்ற பதவிகளுக்கு தகுதியான டாக்டர்கள், செவிலியர்கள், ஆசிரியைகள், விளையாட்டு வீரர்கள், பெண் குழந்தைகள் குறித்த சமூக ஆர்வலர்கள், முன்னாள் பெண் ராணுவத்தினர் எத்தனையோ பேர் இருக்க அவர்கள் ஏன் தேர்வு செய்யப்படுவதில்லை?


ராஜ்
நவ 16, 2025 15:29

அதானே திராவிட உபி தான் பொருத்தமானவர்


கடல் நண்டு
நவ 16, 2025 15:12

யூனிசெப் மூலமாக பல்வேறு நலத்திட்டங்கள் உலகெங்கும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.. ஆனால் இந்தியாவில் நடிகைகளை தூதராக நியமித்து மகிழ்ந்து வரும் அவலம் .. ஒவ்வொரு ஆண்டும் எத்தனை பேர் , எந்தெந்த திட்டங்களால் ,எங்கு , எப்படி பயன் பெறுகிறார்கள் என்பதை இது போன்ற .. பொதுவெளியில் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் செயல்படுத்த அறிவுறுத்துவார்களா??? இல்லை பெயருக்கு மட்டும் தானா ??


முக்கிய வீடியோ