உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவால் இன்று ‛‛ஜனதாகி அதலாத் கூட்டத்தில் உரை

கெஜ்ரிவால் இன்று ‛‛ஜனதாகி அதலாத் கூட்டத்தில் உரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி ஆம் ஆத்மி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று வடக்கு டில்லியில் ஜனதாகி அதாலத் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி உச்சநீதிமன்றத்தால் நிபந்தனை ஜாமின் பெற்ற கெஜ்ரிவால், செப். 15-ல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஆதிஷி என்பவர் செப்.21-ல் முதல்வராக பொறுப்பேற்றார்.இந்நிலையில் இன்று வடக்கு டில்லி சாத்ரசால் மைதானத்தில் இரண்டாவது ‛‛ஜனதாகி அதாலத்'' என்ற பேரணி, பொதுக்கூட்டத்தில் கெஜ்ரிவால் பங்கேற்று உரையாற்றுகிறார்.இது குறித்து ஆம்ஆத்மியின் ராஜ்யசபா எம்.பி., சஞ்சய்சிங் கூறியது, வரப்போகும் டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் நியாயமான தீர்ப்பு வழங்குவர். அது கெஜ்ரிவாலின் நேர்மைக்கான சான்றிதழாகும். தவறான பிசாரத்தின் மூலம் ஆம் ஆத்மி கட்சியையும், கெஜ்ரிவாலையும் ஒழித்து கட்ட நினைப்பதே பா.ஜ.,வின் நோக்கமாக உள்ளது. அதனை கெஜ்ரிவால் முறியடிப்பார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Lion Drsekar
அக் 06, 2024 11:27

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் இதன் பொருள் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதே பாதுகாப்பு, அதே மரியாதை, அதே வாழ்க்கை ஒரு படிமேலே கூறவனேடுமென்றால் அரசியல் வாழ்வில் இருந்துவிட்டால் யாராக இருந்தாலும் அவர்கள் இறந்த பின்பு கொடுக்கப்படும் மரியாதை மற்றும் பாதுகாப்பு அவர்கள் பெயரில் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட சமாதிகளை பார்த்தாலே தெரியும் , கோவில்களுக்கு செல்வது போல் காலணிகளைக் கழட்டி வைத்துவிட்டு செல்வது, 24 மணிநேரமும் ஜோதி என்ற பெயரில் காஸ் அடுப்புகளை வைத்து தீயைக் கொளுத்தி அந்த ஜோதி அணையாமல் இருக்க அதற்கும் பாதுகாப்பு , இவைகளைக் காண tourist அபைப்புகள் , பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணை ஆண்ட மன்னர்களின் பெயர்கள்கூட யாரும் நினைவில் வைத்துக்கொல்லாத வகையில் மாற்றங்கள் செய்த பெருமை நம்மவர்களுக்குண்டு, ஹிரண்யாய நமஹ


Kasimani Baskaran
அக் 06, 2024 07:11

என்னதான் நாடகம் போட்டாலும் பொய்யை நம்ப நீதிமன்றம் தயாரில்லை. ஆகவே அண்ணனுக்கு சிறை உறுதி.


Rajan
அக் 06, 2024 06:22

வடக்குப்பட்டி திராவிட கூட்டம் சேரும். அதை பார்க்க முட்டாள்கள் வருவார்கள்


முக்கிய வீடியோ