உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருமண வரவேற்பு, விருந்து நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கு தடை: கேரள உயர் நீதிமன்றம் யோசனை

திருமண வரவேற்பு, விருந்து நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கு தடை: கேரள உயர் நீதிமன்றம் யோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொச்சி: 'திருமண விருந்துகளில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்தக் கூடாது; பிளாஸ்டிக்கை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'என, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருமண விருந்துகளில் உணவு பரிமாறும்போது, சில்வர் டம்ளர்களில் தண்ணீர் வைப்பது வழக்கொழிந்து போய்விட்டது. தற்போது, திருமணம் மற்றும் அதிகமானோர் கூடும் நிகழ்ச்சிகளில், அதில் பங்கேற்பவர்கள் அருந்துவதற்காக பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரை தருவது வழக்கமாகி விட்டது. இந்நிலையில், பிளாஸ்டிக் தொடர்பான வழக்கு ஒன்றில் கேரள உயர் நீதிமன்றம் அதிரடியான கருத்துகளை தெரிவித்தது.

நீதிபதிகள் கூறியதாவது:

* திருமண வரவேற்பு, விருந்து, முக்கிய நிகழ்வுகள் போன்றவற்றில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் வழங்குவதை தவிர்க்க வேண்டும். * அதற்கு பதில், கண்ணாடி டம்ளர்களை பயன்படுத்தலாம். மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.* நுாற்றுக்கும்அதிகமானோர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், பிளாஸ்டிக் பயன்படுத்த, உள்ளூர் அரசு அமைப்பிடம் இருந்து லைசன்ஸ் பெறும் முறையை கொண்டு வர வேண்டும்.* மலைப் பிரதேசங்களிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டால், இயற்கையை அழித்து வருகிறோம். ரயில்வே துறையும்,பிளாஸ்டிக் குப்பை கழிவுகளில் பொறுப்பில்லாமல் இருக்கிறது.* தண்டவாளங்களை சுத்தமாக வைத்திருப்பது, ரயில்வே துறையின் பொறுப்பு. * அதில், குப்பை சேராமல் தடுப்பதோடு, தண்டவாளங்களை சுத்தமாக வைத்திருக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

V Gopalan
மார் 09, 2025 16:19

Irrespective of court or Govt, first of all why the Govt issuing licence for manufacturing the Plastic bottles, carry bags while the court not indicting the Govt for such lincences, instead go on levying penalty on the retailers, marriage halls et all. Yes, as said Kerala court, use the water glasses instead of plastic bottles, will not lead to hygenic problem of water glasses,? In normal course, in the tea shops where they supply tea/coffee in glass tumblers, do not clean properly just shake in a vessel where hundreds of glasses are washed. First let the court direct the Govt for cancelling the licences for manufacturing and raid on retailers, this would be a great help to save environmental instead of old record.


Ramesh Sargam
மார் 09, 2025 11:39

சரக்கு பாட்டில், சரக்கு குடிக்கும் தம்ளர்கள், சிப்ஸ் பாக்கெட்டுகள் இவையாவும் பிளாஸ்டிக் பொருட்கள்தான். அவற்றுக்கும் தடை விதிக்கவேண்டும். சரக்கு அடிக்கும்போது புகைபிடிப்பார்கள். ஆக அந்த சிகரெட்டுக்கும் தடைவிதிக்கவேண்டும். பிறகு புகையிலை போடுவார்கள். அதற்கும் தடை விதிக்கவேண்டும்.


Ram
மார் 09, 2025 11:30

பிளாஸ்டிக் உற்பத்திற்கே தடைவிதிபத விட்டுட்டு , தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதை எதற்கு ஜூட்ஜு சாறே


अप्पावी
மார் 09, 2025 10:31

எல்கை தாண்டி கழிவுகள் கொட்ட தடை போடுங்க எசமான். இங்கே திருட்டு திராவிடனுங்க துட்டு வாங்கிட்டு கழிவுகளை கொட்ட அனுமதிச்சுடறாங்க.


Oru Indiyan
மார் 09, 2025 10:04

மூல காரணம் என்ன என்பதை ஆரசாய்ந்து அதை தடை செய்ய வேண்டும். நெகிழி தயாரிப்பை தடை செய்யுங்கள். புகையிலை தயாரிப்பை நிறுத்துங்கள். மது தயாரிப்பை நிறுத்துங்கள். அதற்கு விட்டுவிட்டு...


Sampath Kumar
மார் 09, 2025 09:48

நல்ல தீர்ப்பு தமிழ் நாட்டில் இதை நடைமுறை படுத்து அரசு முன் வர வேண்டும்


GMM
மார் 09, 2025 09:19

யோசனை, கருத்து சொல்லும் இடம் நீதிமன்றம் அல்ல .தீர்வு வழங்கும் இடம். தற்போது பிளாஸ்டிக் உற்பத்திக்கு மன்றம் தடை விதிக்க முடியுமா. ? ஆண்டுக்கு குறிப்பிட்ட சதவீதம் உற்பத்தி குறைத்து மறு சுழற்சி பொருள் உற்பத்தி துவங்கினால், பிரச்னை குறையும். மன்றத்திடம் அதிகாரம் உள்ளதா. வக்கீல், போலீஸ், அரசியல் வாதிகள் நிழல் அதிகாரம் மக்கள் அறிய முடியும்.


Kasimani Baskaran
மார் 09, 2025 07:25

கண்ணாடி பாட்டில்கள் கூட சுற்றுச்சூழலுக்கு உகந்தது அல்ல. இலைகளை அதிக அழுத்தத்தில் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புட்டிகளை உபயோகிக்கலாம்.


சிந்தனை
மார் 09, 2025 07:03

திருமணம் கோவில் நிகழ்ச்சிகளில் டாஸ்மாக் பிராந்தி பாக்கெட்டுகள் விநியோகிப்பது கட்டாயம் செய்ய தமிழ்நாடு சட்டசபை ஆலோசனை விரைவில்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை