வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அதெலாம் இல்லை. சுத்தம் இல்லாத கண்டதையும் உண்ணும் மக்கள் அங்கு அதிகம்.
கேரளாவில் மட்டும் அதிகமாக என்ன காரணம்?
அவங்க ரொம்ப படிச்ச பெரிய அறிவாளிகளாச்சே அதனால கொரோனா அவங்களோட ஒட்டிக்கிச்சு
ரொம்ப சரி
திருவனந்தபுரம்: நாட்டிலேயே அதிக கொரோனா நோயாளிகள் கொண்ட மாநிலமாக கேரளா உள்ளதாக புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது.நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. மஹாராஷ்ரா, கர்நாடகா, கேரளா, தமிழகம் என பல மாநிலங்களில் தினமும் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.இதன்படி, கோவிட் பற்றிய லேட்டஸ்ட் புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. தற்போதுள்ள நிலவரப்படி நாட்டில் உள்ள மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 4026 ஆகும். அதில் கேரளாவில் இருக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மட்டுமே 1416 பேர்.அதாவது நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக பதிவாகி உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் 35% பேர் கேரளாவில் இருக்கின்றனர். 2வது இடத்தில் மஹாராஷ்டிராவில் 494 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர்.300க்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் கொண்ட பட்டியலில் 4 மாநிலங்கள் இடம்பிடித்துள்ளன. குஜராத் (397), டில்லி(393) மேற்கு வங்கம்(372), கர்நாடகா(311).கடந்த 2 நாட்களில் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பலியானர்களின் எண்ணிக்கை என்பது 4 ஆகும். இவற்றில் மேற்கு வங்க மாநிலம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் பலியானவர்கள் அனைவரும் 65 வயதை கடந்தவர்கள். இவர்கள் அனைவரும் இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்.
அதெலாம் இல்லை. சுத்தம் இல்லாத கண்டதையும் உண்ணும் மக்கள் அங்கு அதிகம்.
கேரளாவில் மட்டும் அதிகமாக என்ன காரணம்?
அவங்க ரொம்ப படிச்ச பெரிய அறிவாளிகளாச்சே அதனால கொரோனா அவங்களோட ஒட்டிக்கிச்சு
ரொம்ப சரி