உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அபுதாபியில் இருந்து கேரளா வந்த இளைஞருக்கு குரங்கம்மை!

அபுதாபியில் இருந்து கேரளா வந்த இளைஞருக்கு குரங்கம்மை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: அபுதாபியில் இருந்து கேரளா திரும்பிய இளைஞருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.குரங்கம்மை என்பது விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு வகை தொற்றாகும். ஆப்ரிக்காவில் ஆய்வகம் ஒன்றில் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டு இருந்த குரங்கில் இருந்து இதன் வைரஸ் கிருமி எடுக்கப்பட்டதால் இந்த தொற்றுக்கு குரங்கம்மை என்று பெயர். காய்ச்சல், கடும் தலைவலி, சரும கொப்பளங்கள் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இந்நிலையில் அபுதாபியில் இருந்து கேரளா திரும்பிய 26 வயது இளைஞருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. வயநாட்டைச் சேர்ந்த அவர், குரங்கம்மை தொற்றுகளுடன் காணப்பட்டதால் பரியவரம் மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவரின் உடல்நிலை சீராக இருந்தாலும் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இதனிடையே தலசேரியைச் சேர்ந்த மற்றொரு இளைஞருக்கு குரங்கம்மை தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவர் துபாயில் இருந்து கேரளா திரும்பி உள்ளார். குரங்கம்மை அறிகுறிகளுடன் அவர் காணப்பட்டதால், மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன் முடிவுகள் வெளியான பின்னே, குரங்கம்மை பாதிப்பு உள்ளதா என தெரிய வரும் என்று மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

M Ramachandran
டிச 17, 2024 19:35

கேரளா எதிலும் முதன்மை


sundarsvpr
டிச 17, 2024 11:38

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் காய்கறி சுட் செய்தால் ஒரு சில காய்கறியில் புழுத்தல் இருக்கும் இதனை சுட் செய்து ஒதுக்கிவிட்டு திருத்தி சாப்பிடுவோம். இப்போது உள்ள காய்கறிகளில் இந்த நிலை இல்லை. காரணம் ரசாயன உரம், ரசாயன மருந்து வேர்களிலும் செடிகளிலும் தெளிக்கிறோம். இந்த காய்கறிகளை சமையல் செய்து சாப்பிடுவது குரங்கு அம்மை தொற்றை விட ஆபத்து. இதனை எதிர்கொள்ள நிறைய மருந்து மாத்திரை சாப்பிடுகிறோம். அதாவது போராடி வாழ்கிறோம்


Barakat Ali
டிச 17, 2024 09:39

அவனா நீயி - கேட்டகரிக்குத்தான் குரங்கம்மை வருது ன்னு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி உருட்டினாங்களே ????


sundarsvpr
டிச 17, 2024 09:23

சுத்தம் சுகம் தரும். அதுதான் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதாரம். இதனை கவனிக்காமல் எச்சரிக்கையாய் இரு என்பது அழுகிய பொருள்போல். காலை கடன்களை சூரிய உதயத்திற்கு முன் செய்தல். உரிய நேரத்தில் உணவு உட்கொள்ளல். இரவு ஒன்பது முன் உறங்க செல்லுதல். இவைகளை பின்பற்றினால் தொற்று நோய் பாதிப்பு முற்றாது வைத்தியர்களை நாடும் நிலை ஏற்படாது.


அப்பாவி
டிச 17, 2024 08:22

அபுதாபியில் குரங்கு இருக்கா?


S.kausalya
டிச 17, 2024 08:56

பேருக்கு தகுந்த மாதிரி இருக்கீங்களே


Barakat Ali
டிச 17, 2024 09:37

நீயி போனாத்தான் உண்டு ....


Pandi Muni
டிச 17, 2024 09:50

அங்க இருக்கிறவன் எல்லாம் கொரங்குதான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை