உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அறிவால் பணம் வருகிறது!

அறிவால் பணம் வருகிறது!

ஜன் சுராஜ் கட்சி நடத்த எனக்கு எங்கிருந்து பணம் வருகிறது என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். என் அறிவுத்திறனால் எனக்கு பணம் வருகிறது. சரஸ்வதி தேவியால் ஆசீர்வதிக்கப்பட்ட எவருக்கும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் நிச்சயம் கிடைக்கும்.பிரசாந்த் கிஷோர்நிறுவனர், ஜன் சுராஜ்

இரண்டு விஷயங்கள்!

பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்கும் போது,​ இரண்டு விஷயங்களை பற்றி பேச வேண்டும். ஒன்று, அலுமினியம் மற்றும் இரும்புக்கு விதித்துள்ள 25 சதவீத வரி. மற்றொன்று,இந்தியர்களை மோசமான முறையில் நாடு கடத்துவது. மல்லிகார்ஜுன கார்கேதலைவர், காங்கிரஸ்

ஹசாரேவின் மவுனம்!

மத்தியில் 2014 பா.ஜ., ஆட்சிக்கு பின், சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே மவுனமாகி விட்டார். இந்த ஆட்சியில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. அவற்றை பற்றி ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை. ஆனால்,கெஜ்ரிவால் தோல்வி குறித்து பேசியுள்ளார்.சஞ்சய் ராவத்எம்.பி., - சிவசேனா உத்தவ் அணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ