உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அசுத்தத்தில் காய்கறிகள் விற்கும் கே.ஆர்.மார்க்கெட் வியாபாரிகள்

அசுத்தத்தில் காய்கறிகள் விற்கும் கே.ஆர்.மார்க்கெட் வியாபாரிகள்

பெங்களூரு: கே.ஆர்.மார்க்கெட்டில் அசுத்தமான இடத்தில் காய்கறிகள் விற்கப்படுகின்றன. இதை வாங்கிச் சென்று பயன்படுத்தும் மக்கள், பலவிதமான நோய்களுக்கு ஆளாகின்றனர்.பெங்களூரின் இதய பகுதியில் கே.ஆர்.மார்க்கெட் அமைந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து, விவசாயிகள் வாகனங்களில் வந்து கீரைகள், காய்கறிகள் விற்கின்றனர். விற்பனை ஆகாமல் மிச்சமாகும் பொருட்களை, அங்கேயே வீசிச் செல்கின்றனர். இவை அழுகி துர்நாற்றம் வீசுகிறது. மார்க்கெட்டில் எங்கு பார்த்தாலும், அழுகிய காய்கறிகள், கீரைகள் தென்படுகின்றன.இங்கு காய்கறிகள், கீரைகள் வாங்க தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர்.இவர்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டே நடமாட வேண்டிய சூழ்நிலை உள்ளது. அழுகிய பொருட்கள் கிடக்கும் இடத்திலேயே, வியாபாரிகள் காய்கறிகள், கீரைகளை விற்கின்றனர். இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இங்கு விற்கப்படும் பொருட்களை வாங்கிச் சென்று, சமைத்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத், நேற்று முன் தினம் கே.ஆர்.மார்க்கெட்டை பார்வையிட்டார். அசுத்தமாக இருப்பதை பார்த்து, அதிருப்தி தெரிவித்தார். அங்குள்ள வியாபாரிகளுக்கு, துாய்மை குறித்து பாடம் நடத்தினார். ஆனால் நேற்று காலையிலும் மார்க்கெட் அசுத்தமான சூழ்நிலையில் தென்பட்டது.கே.ஆர்.மார்க்கெட் அதிகமான கழிவு உருவாகும் இடமாகும். ஆனால் இங்கு ஒரு முறை மட்டுமே, துப்புரவு தொழிலாளர்கள் குப்பையை அள்ளி சுத்தம் செய்கின்றனர்.அதை அதிகாரிகளும் கண்டுகொள்வது இல்லை என, பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ