உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அட்டப்பாடியில் மண் சரிவு; போக்குவரத்து பாதிப்பு

அட்டப்பாடியில் மண் சரிவு; போக்குவரத்து பாதிப்பு

பாலக்காடு; அட்டப்பாடியில் பெய்து வரும் கனமழையால், சாலையில் பாறையும், மண்ணும் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் மண்ணார்க்காடு அருகே உள்ளது அட்டப்பாடி. வன எல்லையோர பகுதியான இங்கு, பெய்து வரும் கன மழையை தொடர்ந்து, நேற்று மாலை சாலையில் 19ம் கொண்டை ஊசி வளைவின் அருகே, பாறை மற்றும் மண் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவல் அறிந்து அங்கு வந்த மண்ணார்க்காடு தீயணைப்பு படையினர், பொக்லைனின் உதவியுடன் பாறை மற்றும் மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகள் நடந்து வருவதின் ஒரு பகுதியாக, இவ்வழித்தடத்தில் போக்குவரத்தை தடை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !