உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சியாச்சினில் பனிச்சரிவு: 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

சியாச்சினில் பனிச்சரிவு: 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். உலகின் மிக உயர்ந்த மற்றும் அதிக குளிர் நிறைந்த போர் முனையாக சியாச்சின் பனிமலை காணப்படுகிறது. ஏறக்குறைய 23 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள சியாச்சின் பனிமலை, 75 கி.மீ நீளமும், 10 ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவும் கொண்டது. சியாச்சினில் மைனஸ் 30 முதல் 40 டிகிரி தட்பவெப்ப நிலை காணப்படும். இவ்வளவு உயரமான மலைத்தொடரில் இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு அடிக்கடி பனிச்சரிவு ஏற்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=99d9ql3r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இன்று(செப்.,9 ம் தேதி) சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். குஜராத், உபி, ஜார்க்கண்ட் மாநிலங்களை சேர்ந்த அவர்கள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். அதில் சிக்கியிருந்த ராணுவ கேப்டன் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். உயிரிழந்த ராணுவ வீரர்களின் விவரம் இதுவரை வெளியாகவில்லை.இதற்கு முன்னர் 2021 ல் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 பேரும், 2019 ல் 4 ராணுவ வீரர்கள் மற்றும் 2 உதவியாளர்களும் உயிரிழந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Padmasridharan
செப் 10, 2025 18:36

குற்றவாளிகள் புகைப்படங்களை உடனே வெளியிட்டு அவர்களுக்கு செய்திகளின் தினசரி சரித்திரத்தில் இடம் கொடுத்துருவீங்க. ஆனா ராணுவ வீரர்களுடைய புகைப்படங்கள் எங்கே சாமி. கிடைக்கலையே


m.arunachalam
செப் 09, 2025 21:50

நம் மண்ணின் தியாக வீரர்களுக்கு வணக்கம். இங்கு வீதிக்கு ஒரு கட்சி ஆரம்பித்து சுரண்டி பிழைக்கும் சில கேவலங்களை அங்கே கொண்டு சென்று இந்த தியாக வீரர்கள் படும் கஷ்டங்களை புரிய வைக்க வேண்டும்.


Azar Mufeen
செப் 09, 2025 21:00

பணிச்சரிவு மரணம் ராணுவ வீரர்களைத்தான் அதிகம் பலி வாங்குகிறது தீவிரவாதி நாய்களை விட்டுவிடுகிறது


Muralidharan Murugan
செப் 09, 2025 20:30

ஓம் சாந்தி....


Amruta Putran
செப் 09, 2025 20:12

Jai Hind,


Artist
செப் 09, 2025 20:08

ராணுவ வீரர்கள் பலியாவது இனியாவது தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்... அங்கே சாட்டிலைட் அல்லது டிரோன்கள் மூலம் கண்காணிக்க முடியும்/வேண்டும்.


SANKAR
செப் 09, 2025 19:57

please state names and native places.do not like our army men losing life as a number or anonymously.loss need not be in war or exchange of fire this too is a sacrifice.normal men can not survive there even for couple of days