உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாடம் கற்கவில்லை!

பாடம் கற்கவில்லை!

காங்கிரஸ் கட்சியை மக்கள் புறக்கணித்து விட்டனர்; ஆனாலும், பாடம் கற்கவில்லை. நாட்டின் வளர்ச்சி, பெருமையை அந்தக் கட்சி ஏற்க மறுக்கிறது. நம் ராணுவம், தேர்தல் கமிஷன், உச்ச நீதிமன்றத்தையே அக்கட்சியினர் சந்தேகப்படுகின்றனர். இது அவர்களுடைய பழக்கமாகிவிட்டது. ஜோதிராதித்ய சிந்தியா மத்திய அமைச்சர், பா.ஜ.,

விலைக்கு வாங்க முடியுமா?

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரை, பிரதமர் மோடி இரண்டு ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல், நேற்று முன்தினம் அங்கு சென்றபோது அம்மாநில மக்களிடம் வருத்தமோ, மன்னிப்போ கேட்கவில்லை; 7,300 கோடி ரூபாய் திட்டங்கள், 1,200 கோடி ரூபாய் திட்டங்களால் அம்மக்களை விலைக்கு வாங்க முடியுமா? சிதம்பரம் ராஜ்யசபா எம்.பி., காங்கிரஸ்

உயிரை விட பணம் பெரிதா?

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் பலியான 26 இந்தியர்களின் உயிரை விட, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதன் வாயிலாக கிடைக்கும் 3,000 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு பெரிதாக தெரிகிறதா? தேச பக்தியே முதன்மையானது என கூறும் பா.ஜ., இவ்விவகாரத்தில் தன் நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. அசாதுதீன் ஒவைசி தலைவர், ஏ.ஐ.எம்.ஐ.எம்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ