உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வில் சேரலாம்!

பா.ஜ.,வில் சேரலாம்!

மஹாராஷ்டிராவில், துணை முதல்வர் ஏக் நாத் ஷிண்டேயின் சிவசேனாவை ச் சே ர்ந்த, 22 எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் தேவேந்திர பட்னவிசுடன் தொடர்பில் உள்ளனர். பா.ஜ.,வின் தாளத்துக்கு ஏற்ப அவர்கள் ஆடத் துவங்கி உள்ளனர். நிலைமையை பார்த்தால், அவர்கள் எப்போது வேண்டுமானாலும், பா.ஜ.,வில் சேரலாம். ஆதித்ய தாக்கரே முன்னாள் அமைச்சர், உத்தவ் சிவசேனா பிரிவுஆபத்தானது! விமானத் துறையில் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தை ஆதிக்கம் செலுத்த விடுவது, பொருளாதாரத்துக்கு மிகவும் ஆபத்தானது; பயணியரின் நலனுக்கு அச்சுறுத்தலானது. நியாயமான போட்டியை உறுதி செய்ய, நெருக்கடியில் சிக்கி உள்ள, 'இண்டிகோ' விமான நிறுவனத்தை இரண்டு நிறுவனங்களாக பிரிக்க வேண்டும். பிருத்விராஜ் சவான் முன்னாள் மத்திய அமைச்சர், காங்கிரஸ்எந்த பிரச்னையும் இல்லை! 'வந்தே மாதரம்' குறித்து, பார்லி.,யில் சிறப்பு விவாதம் நடப்பதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. சில பா.ஜ., தலைவர்கள் தான், வரலாறு தெரியாமல் காலஞ்சென்ற தலைவர்களை பிடிக்கவில்லை எனக் கூறி அவமதித்து வருகின்றனர். வரலாற்றையும், வங்கத்தின் பங்களிப்பையும் அறியாமல் அவர்கள் எ ப்படி அரசியலில் நுழைந்தனர்? மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை