உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை

மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை

பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் கோதகுறுச்சி காந்திநகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கிருஷ்ணதாஸ், 49, இவரது மனைவி ரஜனி, 37. தம்பதியருக்கு ஒரு மகள், மகன் உள்ளனர்.இந்நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கிருஷ்ண தாஸ், கடந்த, 2022 செப்., 28ம் தேதி அதிகாலை படுக்கை அறையில் துாங்கிக் கொண்டிருந்த மனைவியை, அரிவாளால் வெட்டிக்கொலை செய்ததோடு, தடுக்க முயன்ற 13 வயது மகளின் தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டி படுகாயப்படுத்தினர்.தகவல் அறிந்து வந்த இன்ஸ்பெக்டர் சுஜித் தலைமையிலான ஒற்றைப்பாலம் போலீசார், வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணதாஸ்சை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு விசாரணை, பாலக்காடு முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.இவ்வழக்கில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி விநாயக் ராவு, குற்றவாளிக்கு கொலை செய்ததற்கு ஆயுள் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், மகளை தாக்கிய குற்றத்துக்கு, 23 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.தண்டனையை ஏக காலமாக அனுபவிக்கவும், அபராத தொகையை மகளுக்கு வழங்கவும், அபராத தொகையை வழங்காவிட்டால் கூடுதலாக ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் முரளிதரன் ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ