உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபா செயல்பட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: சபாநாயகர் வேண்டுகோள்

லோக்சபா செயல்பட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: சபாநாயகர் வேண்டுகோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜனநாயகத்துக்காகவும், மக்களுக்காகவும் லோக்சபா செயல்பட எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் ஓம்பிர்லா கூறியுள்ளார்.டில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா இயக்கத்தினர் நடத்திய போராட்டத்தின் போது, மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில், அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் சபாநாயகர் ஓம்பிர்லா உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அப்போது அவர், மக்களின் குரல் கேட்கப்பட வேண்டும். கேள்வி நேரம் நடக்கட்டும். முக்கியமான மசோதா மீது விவாதிக்கப்படட்டும். ஆக்கப்பூர்வமான விவாதங்கள், அர்த்தமுள்ள பங்கேற்பு மற்றும் பார்லிமென்டின் உயரிய மரபுகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்திய ஓம்பிர்லா, மக்கள் சார்ந்த பிரச்னைகளை விரிவான மற்றும் பயனுள்ள வகையில் விவாதிக்கும் வகையில் லோக்சபா நடவடிக்கைகளை சுமூகமாகவும், ஒழுங்காகவும் நடத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மக்களின் பிரச்னைகளை காத்திருக்க வைத்து இருக்கக்கூடாது. அவையில் விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும். ஜனநாயகத்துக்காகவும், மக்களுக்காகவும் தயவு செய்து ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். லோக்சபா செயல்பட அனுமதியுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

என்றும் இந்தியன்
ஆக 10, 2026 16:17

லோக் சபா ஒரு அரசு நிறுவனமா??? பின் எதற்கு எம்பி க்களுக்கு சம்பளம் தருகிண்றீர்கள்?? சம்பளம் தந்த அது ஒரு அரசு நிறுவனம்??? தோன்றும் போதெல்லாம் வெளிநடப்பு செய்யும் எம்பிக்களுக்கு எதற்கு முழு சம்பளம்???


விருமாண்டி
ஆக 10, 2026 17:04

அந்த இருவரிடம் கேள்வி கேட்கவேண்டும் என்று தானே இம்புட்டு கலவரமும்.


விருமாண்டி
ஆக 11, 2026 02:00

மோடி , அமீத் ஷா என்ற இருவரிடம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை