உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீண்ட காலம் பிரதமர் பதவி: இந்திராவை பின்னுக்கு தள்ளினார் மோடி

நீண்ட காலம் பிரதமர் பதவி: இந்திராவை பின்னுக்கு தள்ளினார் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர் பட்டியலில், இந்திராவை பின்னுக்குத் தள்ளி, 2வது இடத்திற்கு பிரதமர் மோடி முன்னேறினார்.ஜனவரி 24ம் தேதி, 1966ம் ஆண்டு முதல் மார்ச் 24ம் தேதி, 1977ம் ஆண்டு வரை 4077 நாட்கள் தொடர்ச்சியாகப் பிரதமராக இருந்த இந்திராவின் சாதனையை இன்று பிரதமர் மோடி முறியடிக்கிறார்.முதல் இடத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு 16 ஆண்டுகள், 286 நாட்கள் இடைவெளி இல்லாமல் மிக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். சுதந்திரத்திற்குப் பிறகு மோடி, காங்கிரஸ் அல்லாத பிரதமரில் மிக நீண்ட காலம் பணியாற்றியவர் மற்றும் உயர் பதவியில் இரண்டு முழு பதவிக்காலங்களை நிறைவு செய்துள்ளார்.இந்திராவுக்கு பிறகு, பெரும்பான்மையுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தற்போதைய பிரதமர் மோடி 2002, 2007, 2012ல் குஜராத் தேர்தல்களிலும், பின்னர் 2014, 2019 மற்றும் 2024ல் லோக்சபா தேர்தல்களிலும் வெற்றி பெற்று, முதல் இடத்தில் உள்ளார்.பிரதமர் மோடி இன்றுடன், ஒரு மாநிலத்திலும், மத்தியிலும் 24 ஆண்டுகள் அரசாங்கத்தை வழி நடத்தியதற்கான மைல்கல்லை எட்டியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 57 )

Natarajan Ramanathan
ஜூலை 26, 2025 04:28

சாதனையை முறியடித்த அற்புத மனிதர்.


J.Isaac
ஜூலை 25, 2025 23:19

2014 முதல் 2024 வரை 12,லட்சம் கோடி வாராக்கடன் த‌ள்ளுபடி. மதத்தை வைத்து சாதரண மக்களை எமோஷன் ஆக்கி ,மொழி பிரச்சனையை உண்டாக்கி, ஊரு இரண்டுபட்டால் கூத்தாடிக்கு தொக்கு என்பது போல் ........


Rathna
ஜூலை 25, 2025 21:32

அரசியல் கடந்து, 1 ராணுவ துறை பல மடங்கு முன்னேறி உள்ளது. 2. மத்தியில் மோடிக்கு பயந்து நேர்மையான அமைச்சர்கள் 3. போக்குவரத்து முன்னேற்றம் - ரயில்வே துறை, விமான நிலையங்கள் 4. பல மடங்கு பொருளாதார முன்னேற்றம். 5. ஏழை நாடு என்பதில் இருந்து மதிப்பிற்கு உரிய நாடாக மாற்றம். தவறுகள் - 1. பணம் மதிப்பு இழப்பு 2. விவசாய துறை சீர்திருத்தம் இல்லை. 3. பங்களாதேஷி ஊடுருவலை தடுக்க முடியாதது. 4. பணம் பணக்காரர்கள் கையில் குவிவதை தடுக்க முடியவில்லை. 5. வெளி நாட்டில் உள்ள பொருளாதார குற்றவாதிகளை கொண்டு வர முடியாதது.. .


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 26, 2025 12:36

1ஐ தவிர மீதி எதையும் சாதனையாக கருதமுடியாது... அவை தவறான புரிதல் .... ஊழல் குறித்து பத்திரிகைகள் எதுவுமே ஏழடுத்துவதில்லை .. எழுதும் பத்திரிகைகளை அதானி மூலம் வலுக்கட்டாயமாக வாங்கப்பட்டுவிடுகிறது ....பொருளாதாரம் ன்னும் பலமடங்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தும் நிர்மலா போன்ற தலையாட்டி பொம்மைகளாலும்


Padmasridharan
ஜூலை 25, 2025 18:01

சினிமாக்காரர்களை அதிகமாக சேர்த்து வெச்சி அப்பொழுது அரசியல் நடத்தவுமில்லை. NOTA என்பதுமில்லை சாமி.


ஆரூர் ரங்
ஜூலை 25, 2025 14:03

நேரு முதலில் தேர்தலை சந்திக்காமல் 1952 வரை பதவியை வகித்தார். பிறகு 12 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். (இரு போர்களில் தோல்வி). இந்திராவும் தேர்தலை சந்திக்காமல் நியமன எம்பியாக இருந்தபடியே காமராஜர் தயவில் நியமன பிரதமரானவர். (ஊடகங்களை ஒடுக்கி பிழைத்தார்.) மோதி ஒருவர்தான் 2002 முதல் இன்றுவரை தொடர்ந்து 23 ஆண்டுகள் சுய முயற்சியால் முதல்வராகவும் பிரதமராகவும் உள்ளார்.


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 25, 2025 16:35

ஆனா இன்னமும் நேரு .. இந்திரா என்று தொங்கிக்கொண்டிருப்பது தான் பார்க்க தமாஷா இருக்கு பரிதாபமாகவும் இருக்கு ... அவர்கள் விட்டுச்சென்ற மைல்கல்களை சங்கிக்கும்பல் உண்மையான விதத்தில் எந்தக்காலத்திலும் தாண்டமுடியாது என்பது சந்தோஷமாகவும் இருக்கு ....சுய முயற்சியா ??? நல்லா யோசித்துப்பாருங்க ... அத்வானிக்கு ரயில் பெட்டி வாசலில் தொங்கிக்கொண்டு மெகாபோணை தூக்கிக்கொண்டு நின்றது தான் சுயமுயற்சி அதற்கு மேலே நல்லவிதத்தில் சொல்வதற்கு ஒன்னும் இல்லை ....


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 25, 2025 16:37

ஆரம்பக்காலத்தை ஆர் எஸ் ஸ்ஸ் பின்புலத்தில் .. பிற்பாடு அதானி பின்புலத்தில் வளர்ந்தவர்கள் எல்லாம் இப்படி பேசுவது தான் கொடுமை ....அதானி என்ற ஒத்தை ஆளு இல்லையென்றால் இவரு எப்போவோ காணாமல் போய் இருப்பாரு ...


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 25, 2025 16:41

என்னவோ மோடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து BJ கட்சி குஜராத்தில் ஆட்சி பிடித்தமாதிரி ஒரு பிம்பம் .. முதல் முறை முதல்மந்திரி ஆன கதை ள்ளோருக்கும் மிக நல்லா தெரியும் ....


Sivagiri
ஜூலை 25, 2025 12:12

மோடி இன்னும் ஒரு இருபது வருஷத்துக்கு பதவியில் இருந்தால்தான் இந்தியா - பாரதம் ஆக முடியும் . . . இன்னும் காங்கிரஸ் கம்பெனியை மூட முடியவில்லை . . ?. . . நக்ஸல்களை அழித்தாச்சு . . ஆனால், பல மாநிலங்களில் தேச விரோதிகள் தேச துரோகிகளின் ஆட்சி அட்டகாசத்தை ஒழிக்க முடியவில்லை? இன்னும் பாகிஸ்தான் அட்டகாசத்தை ஒழிக்க முடியவில்லை... நாடு முழுவதும் பரவிவிட்ட ஆப்கான் பாகிஸ்தான் பங்களாதேசி ஸ்லீப்பர்செல்-களை வெளியேற்ற முடியவில்லை... இன்னும் கூம்பு ஒலிபெருக்கி அடாவடிகளை நிறுத்த முடியவில்லை? யோகாவை வளர்க்கும் வேகத்தை விட சூப்பர்சோனிக் வேகத்தில் வளரும் கஞ்சா அபின் போதைப்பொருள் வரத்துகளை நிறுத்த முடியவில்லை , இன்னும் , மசூதிகளாக மாற்றப்பட்ட, பல்லாயிரம் கோவில்கள் மீட்கப்படவில்லை . . . இன்னும் ஏராளமான பணிகள் முடியவில்லை . . .


K V Ramadoss
ஜூலை 25, 2025 20:55

மொத்தத்தில் மோடியின் கடமை முடியவில்லை ......


தத்வமசி
ஜூலை 25, 2025 11:54

பிரயோசனமில்லை, நாட்டுக்கு பின்னுக்குத் தள்ளினார் என்றெல்லாம் புலம்பும் உபிக்களுக்கும், உண்டியல் குலுக்கிகளும் நாட்டை ஆள்வது என்றால் என்ன பொருள் என்பது தெரியுமா ? கும்மிடிபூண்டி தாண்டாதவர்களுக்கு என்ன புரியும் ? முரசொலியும், தீக்கதிரும் படித்தால் பொதுஅறிவு கொட்டோ கொட்டு என்று கொட்டும். ஆனால் இருநூறு ரூபாய்க்கு மேல் கிடைக்காது.


babu
ஜூலை 25, 2025 11:23

இந்தியாவையும் பின்னிக்கு தள்ளினார்


SUBRAMANIAN P
ஜூலை 25, 2025 14:08

ஆமாம்.. இவர்தான் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம். தெரிந்துகொள்ளுங்கள்.


Against traitors
ஜூலை 25, 2025 16:20

ஆமாம் குழியில் விழாமல் பின்னால் தள்ளினார். பப்பு, மூர்க்கங்கள் வெட்டின குழி


P. SRINIVASAN
ஜூலை 25, 2025 11:04

ஒரு பிரயோஜனமும் இல்லை


vivek
ஜூலை 25, 2025 14:39

சீனு...ஆமாம். உன்னால் எந்த பிரயோஜனம் இல்லை...உன் குடும்பத்திற்கும் இல்லை.


P. SRINIVASAN
ஜூலை 25, 2025 15:30

விவேக், நீ ஒரு தண்டம்


MP.K
ஜூலை 25, 2025 10:59

வாழ்த்துக்கள்


புதிய வீடியோ